Connect with us

3 லட்சம் கொடுத்தா வரேன்.. கமிட்மெண்ட் கூறிய நடிகையை விளாசிய இயக்குனர்!..

tamil actress

News

3 லட்சம் கொடுத்தா வரேன்.. கமிட்மெண்ட் கூறிய நடிகையை விளாசிய இயக்குனர்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு புதிய புதிய சர்ச்சைகளை தமிழ் சினிமா கொடுத்து வருகிறது.

அந்த வகையில் கிசுகிசுக்களுக்கு எல்லாம் மேலாக தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகள். நடிகர்கள் கொடுக்கும் சர்ச்சைகள் தான் பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கூட சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு நடிகர் ஒருவர் கலந்து கொள்ளாததை பற்றி மேடையில் ஒரு தயாரிப்பாளர் ஆவேசமாக பேசியிருப்பார்.

அதுபோல தற்பொழுது ஒரு வளர்ந்து வரும் நடிகை ஒருவர் தயாரிப்பாளியரிடம் பேசியிருப்பது பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது.

நாற்கரப்போர் திரைப்படம்

வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தை படத்தை இயக்குனர் ஸ்ரீ வெற்றி என்னும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். எனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போது சமூக நீதிக் கருத்துகளை இந்த படம் பேசும் என தெளிவாக தெரிந்தது. இந்நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது அப்பொழுதுதான் இந்த சம்பவத்தை பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருப்பது

தற்பொழுது படம் நன்றாக வந்துள்ளது. மேலும் படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் அபர்ணதி நடிப்பு சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தின் ப்ரோமோஷனுக்கு அவர் வரவில்லை. இது தற்பொழுது சினிமாவில் ஒரு சாபக்கேடாக மாறி வருகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்கு நடிகர், நடிகைகள் வராமல் இருப்பது ட்ரெண்டிங் ஆகி வருகிறது என கூறியிருக்கிறார்.

ரூ. 3 லட்சம் கேட்ட அபர்ணதி

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அபர்ணதி ப்ரோமோஷனுக்கு வர வேண்டுமென்றால், தனக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என கூறியுள்ளார். நான் அந்த நடிகையை தொடர்பு கொண்டு பேசினேன். அப்பொழுது நீங்கள் கட்டாயம் ப்ரமோஷனுக்கு வர வேண்டும் என நான் கூறினேன். ஏனென்றால் சினிமா தற்பொழுது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒருவர் படத்தை எடுத்து வெளியிடுவது என்பது சவாலாக இருக்கிறது.

tamil actress

ஆனால் அபர்ணதி அதையெல்லாம் காதல் வாங்கிக் கொள்ளாமல், இரண்டு மூன்று கண்டிஷன்கள் வைத்தார். அதில் ப்ரோமோஷனில் என் அருகில் இவர்கள் தான் அமர வேண்டும். எனக்கு சமமானவர்கள் தான் அமர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். எனக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

எனவே இது குறித்து நீங்கள் நடிகர் சங்கத்தில் புகார் கொடுங்கள் என நான் கூறிவிட்டேன். அதற்கு அபர்ணதி நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என தெரிவித்துவிட்டார். இறுதியாக வருவீர்களா என கேட்டதற்கு எனக்கு 3 லட்சம் கொடுத்தால் மட்டும் தான் வருவேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த நடிகை எனக்கு போன் செய்து, நீங்கள் யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். சாரி சார் நான் ப்ரோமோஷன்க்கு வருகிறேன் என கூறினார். ஆனால் நான் சாரி சொல்லி என்ன ஆகப் போகிறது. நீங்கள் படத்திற்கு வந்தால் தயாரிப்பாளருக்கும், படத்திற்கும் நல்லது என கூறினேன். ஆனால் அவர் இன்றைக்கு வரவில்லை. கேட்டால் அவுட் ஆஃப் ஸ்டேஷன் என பதில் வருகிறது. இது போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு தேவை இல்லை என்ன சுரேஷ் காமாட்சி பேசியுள்ளார்.

இது தற்பொழுது அவர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

To Top