எனக்கு அந்த பொண்ணுதான் ஹீரோயினா வேணும்!.. பாலாவிடம் அடம் பிடித்த சூர்யா..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். விக்ரம் திரைப்படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகளில் சிறிது நேரமே வந்தாலும் கூட அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு வந்துள்ளது.

மேலும் சூர்யா இதுவரை நடித்த படங்களில் இவ்வளவு மோசமான வில்லனாக நடித்ததே இல்லை. மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு என தனியாக திரைப்படம் வரவும் வாய்ப்பிருப்பதாக பேச்சுக்கள் உள்ளன. சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்தனர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் அதற்கு முன்பு சில சுவாரஸ்யமான விஷயங்கள் சினிமாவில் நடந்துள்ளது.

நந்தா படத்தில் சூர்யா நடிக்கும்போது அந்த படத்தை இயக்குனர் பாலாதான் இயக்கினார். பொதுவாகவே பாலா யார் பேச்சையும் கேட்க மாட்டார். நந்தா படத்தில் கதாநாயகியாக லைலாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் பாலா. இந்த நிலையில் பாலாவிடம் சென்ற சூர்யா அந்த படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க வேண்டும் என பாலாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் பாலாவிற்கு அதில் விருப்பமில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு லைலாதான் சரியாக இருப்பார் என நினைத்தார் பாலா. எனவே அவர் சூர்யாவின் வேண்டுக்கோளை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு நந்தா படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன கெளதம் மேனன் தனது படமான காக்க காக்க திரைப்படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டார்.

அந்த நேரத்தில் கெளதம் மேனனிடமும் கூட ஜோதிகாவை நடிக்க வைப்பது குறித்து பேசியுள்ளார் சூர்யா. அதன் பிறகே காக்க திரைப்படத்தில் ஜோதிகாவை நடிகக் வைத்துள்ளார் கெளதம் மேனன்.