Cinema History
கண்ணீரோடு நடு ரோட்டில் நின்ற சுருளிராஜன்!.. வாழ்க்கையையே மாற்றிய ஒரு கட் அவுட்!..
தமிழில் உள்ள காமெடி நடிகர்களை பொறுத்தவரை இப்போது இருப்பதை காட்டிலும் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் கொஞ்சம் அதிகமாகவே காமெடி நடிகர்கள் இருந்தனர்.
அதில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுருளிராஜன் சுருளிராஜன் தனக்கென ஒரு உடல் பாணியையும், பேச்சு பாணியையும் கொண்டிருந்தார். அதை கொண்டு நகைச்சுவையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் கூட நடித்துள்ளார் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் படுத்தும் பாடு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக காமெடியனாக அறிமுகமானார் சுருளிராஜன்.
அந்த திரைப்படத்தில் அவருக்கு பொன்னம்பலம் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. மக்கள் மத்தியிலும் அந்த கதாபாத்திரத்திற்கு அதிகமான வரவேற்பு இருந்தது. இருந்தாலும் கூட அதற்குப் பிறகு சுருளிராஜனுக்கு பெரிதாக வாய்ப்பே வராமல் இருந்தது.

இதனால் விரக்தி அடைந்த சுருளிராஜன் திரும்ப ஊருக்கே சென்று ஏதாவது நாடகம் நடத்தி கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு பிறகு சென்னைக்கு வருவோம் என தனது ஊருக்கு சென்றார். ஆனால் அங்கு சென்று அவர் நடத்திய நாடகமும் நஷ்டத்தில் முடிந்தது.
பிறகு மீண்டும் விரக்தியாக சென்னை வந்த சுருளிராஜன் அதை தன் நண்பரிடம் கூறி அழுது கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பர் குறிப்பிட்ட ஒரு இடத்தை கூறி அங்கே சென்று பார் பிறகு உனக்கு உண்மை புரியும் என்று கூறியுள்ளார். ஒன்றும் புரியாத சுருளிராஜனும் அந்த இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு சுருளிராஜனின் கட் அவுட் ஒன்று மிகப்பெரியதாக வைக்கப்பட்டிருந்தது காதல் படுத்தும் பாடு திரைப்படத்திற்காக அந்த கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த சுருளிராஜன் சென்னை நம்மளை வரவேற்க தயாராக தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் எனவே மீண்டும் திரைத்துறையை நோக்கி சென்றார் சுருளிராஜன். அதன் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரத் துவங்கின.
