Connect with us

கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் அந்த கதாபாத்திரமா!.. அப்ப ரோலக்ஸ் அடி வாங்குமே!.. சூர்யா 44 அப்டேட்!..

karthik subbaraj

News

கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் அந்த கதாபாத்திரமா!.. அப்ப ரோலக்ஸ் அடி வாங்குமே!.. சூர்யா 44 அப்டேட்!..

Social Media Bar

தமிழில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. மற்ற நடிகர்கள் போல தொடர்ந்து சண்டை படங்களாக மட்டும் நடிக்காமல் கொஞ்சம் மாறுப்பட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் நடிகர் சூர்யா.

அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. தற்சமயம் இவர் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜிடம் ஹாலிவுட் இயக்குனரான க்வாண்டின் டெரண்டினோவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரத்த காட்சிகள் இல்லாத கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தை பார்ப்பது அரிது.

அதற்கு தகுந்தாற்போல இந்த திரைப்படமும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 17 துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை போலவே இந்த படமும் வேறு காலக்கட்டத்தில் நடக்கும் கதை என கூறப்படுகிறது.

ரோலக்ஸ் திரைப்படத்திலும் சூர்யா தொடர்ந்து கேங்ஸ்டராக நடிக்க இருப்பதால் இது சூர்யாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

To Top