Connect with us

பழைய நன்றியை மறந்த சூர்யா.. ரெண்டு பேருக்குமே இது துரோகம் தானே?..

surya rajinikanth

News

பழைய நன்றியை மறந்த சூர்யா.. ரெண்டு பேருக்குமே இது துரோகம் தானே?..

Social Media Bar

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் நடிகர்களுக்கு பிறகு போட்டி நடிகர்களாக இருந்து வந்தவர் சூர்யா. ஆனால் சில திரைப்படங்களின் தோல்விகள் காரணமாக பிறகும் பின்தங்கிய நடிகராக மாறிவிட்டார்.

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் அளவிற்கு அவருக்கு மார்க்கெட் இருந்தால் கூட சில படங்கள் அவருக்கு தோல்வியடைந்த காரணத்தினால் அவரது சம்பளம் மட்டும் அதிகரிக்கவே இல்லை. படத்தின் சம்பளம் என்பதை தாண்டி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் சூர்யா.

24, பிதாமகன் மாதிரியான தமிழ் சினிமாவில் மாற்று கதைகளை கொண்டு வரும் திரைப்படங்களை நடித்து வருவதால்தான் சூர்யாவிற்கு சில படங்கள் ஓடாமல் போகின்றன. ஆனால் சில சமயம் அது கை கொடுக்கவும் செய்கிறது.

மாற்று கதைகள்:

இதற்கு முன்பு இதே போல அவர் மாற்றுகதையை தேர்ந்தெடுத்து நடித்தார் அப்படி அவர் நடித்த சூரரை போற்று, ஜெய் பீம் ஆகிய  திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஜெய் பீம் திரைப்படம் சூர்யாவிற்கு மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம்.

actor surya

கிட்டத்தட்ட சூர்யாவின் மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் பெரிதாக உயர்த்தி இருக்கிறது ஜெய் பீம் திரைப்படம். ஜெய் பீம் திரைப்படத்தை இயக்குனர் தா.சே ஞானவேல் இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஞானவேல் இயக்கத்திலேயே ஒரு படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டார் சூர்யா.

ஆனால் அதற்குள்ளாக வேறு படத்தில் கமிட்டானதால் அந்த படத்தை விட்டுவிட்டார். இந்த நிலையில்தான் அடுத்து ரஜினியை வைத்து ஞானவேல் வேட்டையன் என்கிற திரைப்படத்தை இயக்க துவங்கினார். வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன.

கங்குவா பட வரவேற்பு:

இந்த நிலையில் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு போட்டியாக தற்சமயம் சூர்யா அவர் நடித்து வரும் கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார். கங்குவா படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்புகள் இருந்து வருகிறது.

kanguva
kanguva

ஆனால் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்திற்கு அதிகமாக வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கண்டிப்பாக கங்குவா திரைப்படத்திற்குதான் அதிக வரவேற்பு இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இப்படி இருக்கும்போது மூத்த நடிகர் ரஜினியைதான் மதிக்கவில்லை. வெற்றி படம் கொடுத்த இயக்குனரை மதித்தாவது வெளியிடும் தேதியை மாற்றியிருக்கலாமே என்கின்றனர் நெட்டிசன்கள்.

To Top