News
இதுதான் கங்குவா படத்தின் கதை!.. க்ளைமேக்ஸில் வரும் புது வில்லன்!. (Story of Kanguva Movie)
- கங்குவா கதை
- வழக்கமான சிறுத்தை சிவா பாணியில் கதை
- பழங்குடியின மக்களின் கதை
தமிழ் சினிமாவில் அதிகமாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் கங்குவா திரைப்படம் சூர்யா இதுவரை நடித்த திரைப்படத்திலேயே அதிக பட்ஜெட் திரைப்படம் என்று கூறப்படுகிறது.
கங்குவா படத்தின் கதை:
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 350 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படத்தை கிட்டத்தட்ட 40 மொழிகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
1800 வருடங்களுக்கு முன்பு இருந்த ஒரு பழங்குடியின மக்களின் கதையை கூறும் திரைப்படம்தான் கங்குவா என்று கூறப்படுகிறது இரண்டு பழங்குடியின மக்களுக்கு இடையே நடக்கும் மோதல்தான் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான வைகிங் என்னும் சீரிசை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் ஹாலிவுட் ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி கங்குவா திரைப்படம் சூர்யாவின் நடிப்புக்காகவே அதிகமாக பேசப்படுகிறது.

பிதாமகன் காலத்திலேயே சூர்யா வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து நடிக்க கூடியவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கங்குவா திரைப்படத்திலும் அப்படியான ஒரு கதாபாத்திரமாக தான் அவர் இருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தில் பாபி தியோல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதைப்படி அவர் எதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன குழுவுக்குள் நடக்கும் சண்டையை அடிப்படையாகக் கொண்டதாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
புது வில்லன்:
ஆனால் படத்தின் கிளைமாக்ஸில் இவர்கள் இனத்திற்கு இல்லாத ஒரு புது நபர் அதாவது உண்மையான எதிரி அப்போதுதான் வருவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே சிறுத்தை சிவா திரைப்படத்தில் பார்த்தோம் என்றால் முதல் பாதியில் ஒரு சின்ன வில்லன் ஹீரோவை எதிர்த்து கொண்டு இருப்பான்.
அதற்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாதியில் தான் உண்மையான வில்லன் வருவதை பார்க்க முடியும். அண்ணாத்த விசுவாசம் வீரம் மாதிரியான அனைத்து திரைப்படங்களிலுமே இந்த விஷயத்தை கவனிக்க முடியும் அதையே இரண்டு பாகமாக எடுக்கும் பொழுது சின்ன வில்லனாக பாபி தியோலையும் முக்கிய வில்லனாக இன்னொரு நபரையும் வைத்திருக்கிறார் சிறுத்தை சிவா.
அந்த இன்னொரு நபர் யார் என்பது சர்ப்ரைஸான விஷயமாக காக்கப்பட்டு வருகிறது ஆனால் இரண்டாம் பாகத்தில் தான் முக்கிய வில்லன் வருவதாகவும் படத்தின் கதை துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது முதல் பாகம் ஒரு இண்ட்ரொடக்சன் மட்டும்தான் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
