Connect with us

கங்குவா படத்தின் கதை இதுதான்.. ஆர்வத்தில் லீக் செய்த சூர்யா..!

surya kanguva

Tamil Cinema News

கங்குவா படத்தின் கதை இதுதான்.. ஆர்வத்தில் லீக் செய்த சூர்யா..!

Social Media Bar

Suriya starrer Ganguwa is slated to hit the theaters on November 14. This film is getting a lot of response from people. Suriya has spoken about the story of this film.

தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது.

மாபெரும் பொருட் செலவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் தயாராகி இருக்கிறது இந்த திரைப்படம் ஏற்கனவே இரண்டு முறை வெவ்வேறு தேதிகளில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு பிறகு தேதி மாற்றம் செய்யப்பட்டது.

இறுதியாக அக்டோபர் 10 ல் இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் வேட்டையன் திரைப்படம் வெளியான காரணத்தினால் தற்சமயம் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கங்குவா படத்தின் கதை:

surya kanguva

surya kanguva

இந்த படத்தின் கதை மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதிகமாக இந்த படத்திற்கு செலவு செய்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்து அவர் தயாரிக்கும் திரைப்படங்களே இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜென்மம் மற்றும் இந்த ஜென்மத்திற்கு நடுவே நடக்கும் கதையாக கங்குவா இருக்கும் என்பது ஒரு பக்கம் அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் படத்தின் சில முக்கிய விஷயங்களை வெளியிட்டு இருக்கிறார் சூர்யா.

அதில் அவர் கூறும் பொழுது இந்த கதை 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியின மக்களின் கதையாகும். மூன்று வெவ்வேறு தெய்வங்களை வணங்கிய மூன்று பழங்குடியின குழுக்கள் அவர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை இதனால் ஏற்படும் விஷயங்களை அடிப்படையாக வைத்து தான் கங்குவா படத்தின் கதை இருக்கும். என்று சூர்யா கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் கதையின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை வெளியிட்டதன் மூலம் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறார் சூர்யா.

To Top