Connect with us

உன் சாவு அசிங்க அசிங்கமா இருக்கும்… பிரபல நடிகையை வைத்து செய்த சுசித்திரா!..

kasturi susithra

News

உன் சாவு அசிங்க அசிங்கமா இருக்கும்… பிரபல நடிகையை வைத்து செய்த சுசித்திரா!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் ஒரு முக்கியமான பிரபலமாக இருந்து வருபவர் பாடகி சுசித்ரா. தனது முன்னாள் கணவரான கார்த்திக் குமாரை விவாகரத்து செய்த இவர் தொடர்ந்து கார்த்திக்குமார் குறித்த நிறைய அவதூறுகளை பேசி வந்தார்.

முக்கியமாக கார்த்திக் குமாரும் தனுஷும் காதலித்து வருவதாக ஒரு சர்ச்சையை கிளப்பி இருந்தார் இவர். அதே போல தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் வெளிப்படுத்தி வந்தார்.

சுசித்ரா சர்ச்சை:

இதனை பார்த்த பலரும் சுசித்ராவை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பழம்பெரும் நடிகையான கஸ்தூரி விசித்ரா குறித்து பேசி இருந்தார் அதாவது கஸ்தூரி தமிழ் சினிமாவில் கார்த்திக் மாதிரியான நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் பிரபலமாக இருந்த நடிகை ஆவார்.

தற்சமயம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் கஸ்தூரி. இவர் சமீபத்தில் பேசும் பொழுது சுசித்ராவிற்கு தற்சமயம் மருத்துவ உதவி மனநல உதவி தேவைப்படுகிறது. அதனால்தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று பேசியிருந்தார்.

கஸ்தூரி விமர்சனம்:

அவருக்கு மனரீதியாக ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது அவர் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு நாம்தான் உதவி புரிய வேண்டும். அதனால்தான் அவர் மீடியாக்களிடம் வெளிப்படையாக பேசி வருகிறார் என்று பேசியிருந்தார் கஸ்தூரி.

இதனால் மிகவும் கடுப்பாகி இருந்தார் சுசித்ரா அவர் தனது வீடியோவில் இதற்கு பதில் அளிக்கும் போது எனது அம்மா அப்பா இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கஸ்தூரி கூறியிருந்தார்.

அது உண்மை கிடையாது எனது அம்மா அப்பாவை பற்றி தப்பாக பேசிய கஸ்தூரிக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. அவரை என்னென்ன கெட்ட வார்த்தையில் திட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று இன்னும் அவதூறான பல வார்த்தைகளால் கஸ்தூரியை திட்டி வீடியோ வெளியிட்டார் சுசித்ரா. இதுதான் தற்சமயம் ட்ரெண்டிங் செய்தியாகி வருகிறது.

To Top