Connect with us

பிக்பாஸ்ல கமலுக்கு பதிலா என்னை போடுங்க!.. எஸ்.வி சேகர் வைத்த கோரிக்கை!..

sv sekar kamal

Cinema History

பிக்பாஸ்ல கமலுக்கு பதிலா என்னை போடுங்க!.. எஸ்.வி சேகர் வைத்த கோரிக்கை!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் காமெடி நடிகராகவும் அறியப்படுபவர் எஸ்.வி சேகர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எஸ்.வி சேகர் நாடகங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார்.  இந்த நிலையில்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் கூட நாடகத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து நாடகங்களும் எடுத்து வந்தார். அவரின் வானொலி நாடகங்கள் அப்போது மிகவும் பிரபலமானவை. உலகம் முழுவதும் பல நாடுகளில் நாடகங்களை நடத்தியுள்ளார் எஸ்.வி சேகர்.

இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியிருந்தார். அதில் அவர் பேசும்போது பலரும் பிக்பாஸ் வந்தால் அதன் மூலம் பிரபலமாகிவிடலாம் என்பதற்காக பிக்பாஸ் வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர்களால் அப்படி வர முடியாது.

ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அவர்களை பார்க்கும் மக்களுக்கு அவர்களை பிடிப்பதில்லை. என்னிடம் கூட ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு கேட்டார்கள். ஆனால் நான் கமலுக்கு பதிலாக தொகுத்து வேண்டுமானால் வழங்குகிறேன். என்று கூறினேன். என்னால் போட்டியாளராக எல்லாம் இருக்க முடியாது என வெளிப்படையாக கூறியுள்ளார் எஸ்.வி சேகர்..

To Top