Cinema History
என் பையனை அடிக்கிறீல நீ!.. டி ராஜேந்தர் கண் முன்னே சிம்புவை அடித்த நடிகர்!..
தமிழ் சினிமாவில் சோக படங்கள் இயக்கியே மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் டி ராஜேந்தர். பெரும்பாலும் டி. ராஜேந்தர் இயக்கும் திரைப்படங்கள் சோக முடிவுகளை கொண்டிருந்தாலும் கூட அப்போது அதற்கு அதிக வரவேற்புகள் இருந்தன.
சொல்லப்போனால் சோக முடிவு இருக்கும் என தெரிந்தே டி.ஆரின் படங்களுக்கு மக்கள் செல்வதுண்டு. இந்த நிலையில் டி.ஆர்தான் சிம்புவை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வளர்த்துவிட்டவர். சிறுவயது முதலே டி.ஆர் படங்களில் சிம்பு நடித்து வந்தார்.
சிம்பு சிறுவனாக இருந்தப்போதே அவரை கதாநாயகனாக வைத்து சபாஷ் பாபு என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் டி.ஆர். சிம்பு வளர்ந்தப்பிறகு அவரை கதாநாயகனாக வைத்து காதல் அழிவதில்லை என்கிற திரைப்படத்தை இயக்கினார் டி.ஆர்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் சிம்புவை போலீஸ் அடிப்பது போன்ற காட்சி ஒன்று வரும். அப்போது சிம்புவின் முகத்தில் அடிக்கும்போது நிஜமாகவே அவருக்கு அடிப்பட்டுவிட்டது. அப்பா என கத்திவிட்டார். அதனை பார்த்து துடி துடித்து போனார் டி.ஆர்.
உடனே அந்த போலீசாக நடித்த நடிகர் சாரி சார் தெரியாம பட்டுடுச்சு. ரீ டேக் போய்க்கலாம் என கூறியுள்ளார். உடனே அந்த நடிகரை பார்த்த டி.ஆர் என் புள்ளையை அடிக்கிறீல நீ.. ரீ டேக் எல்லாம் வேண்டாம் என கூறிவிட்டார். பிறகு அந்த காட்சி அப்படியேதான் படத்தில் வைக்கப்பட்டது.
