Tag Archives: Actress gallery

மாடர்ன் ட்ரெஸ்ஸில் இது வேற லெவல்! – அதிதி ராவின் புது கெட்டப்!

பல வருடங்களாக பாலிவுட் சினிமாவில் இருந்துவிட்டு பிறகு கோலிவுட்டில் வந்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. ஹிந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்தார்.

தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்புகளை பெற்று வந்த அதிதி ராவ் தமிழில் காற்று வெளியிடை திரைப்படம் மூலமாக அறிமுகமானார். காற்று வெளியிடை திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். ஆனால் காற்று வெளியிடை பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. இதனால் அந்த படம் அதிதிக்கு சிறப்பாக அமையவில்லை.

செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் மணிரத்னம். செக்க சிவந்த வானம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதிதிக்கும் தமிழில் வரவேற்பு கிடைக்க துவங்கியது.

இதையடுத்து சைக்கோ, ஹே சினாமிகா என வரிசையாக தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு நல்ல படங்களாக அமைந்தன. இந்நிலையில் தற்சமயம் நடிகர் சித்தார்த்தை இவர் காதலித்து வருகிறார்.

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில தற்சமயம் வைரல் ஆகி வருகின்றன.

கட்ட கட்ட நீ நாட்டுக்கட்ட – மெலிசான ஆடையில் வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங்

2013 இல் துவங்கி இதுவரை 10க்கும் குறைவான படங்களே நடித்துள்ளார் நடிகை ரித்திகா சிங். இவர் முதன் முதலாக இறுதி சுற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

2016 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரித்திகாவிற்கு மிக முக்கியமான கதாபாத்திரம் இருந்ததால் அவரும் அதிகமாக வரவேற்பை பெற்றார்.

பிறகு அவர் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படம் ஒரு கதாநாயகியாக அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஆனால் அதற்கு பிறகு வெகு காலங்களுக்கு ஒரு சிறப்பான திரைப்படமே அவருக்கு அமையவில்லை என கூறலாம்.

பிறகு 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மீண்டும் ரித்திகாவிற்கு சிறப்பான திரைப்படமாக அமைந்தது. இந்த படங்களே ரித்திகாவை மக்கள் ரசிக்கும் படங்களாக அமைந்தன. இதனால்தான் 10 படங்களுக்கு குறைவாக நடித்திருந்தாலும் ரித்திகா ஒரு அறியப்படும் கதாநாயகியாக இருக்கிறார்.

தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

படம் தேறுமா! – பகாசுரன் குறித்து ரசிகர்கள் கருத்து!

தமிழின் பிரபலமான இயக்குனர் செல்வராகவன் நடித்து மோகன் ஜி இயக்கத்தில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் பகாசுரன். ஏற்கனவே ருத்ர தாண்டவம், த்ரெளபதி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி.

படத்தின் கதை:

இராணுவத்தில் இருந்து ரிட்டயர்டு ஆகி ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறார் நட்டி நடராஜன். அந்த சேனலில் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். திடீரென ஒரு நாள் அவரது அண்ணன் மகள் தற்கொலை செய்துக்கொள்ளவே அது ஏன் நடந்தது என்பதை கண்டறிய புலனாய்வு செய்கிறார் நட்டி.

இதே நேரத்தில் சிவபக்தராக இருக்கும் செல்வராகவன் தொடர்ந்து மர்மமான முறையில் கொலைகளை செய்து வருகிறார். இவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் புள்ளியாக டேட்டிங் ஆப் இருக்கிறது. டேட்டிங் ஆப் மூலம் பெண்கள் பாதிக்கப்படுவதாக கதைக்களத்தை வைத்து படத்தை இயக்கியுள்ளார் மோகன் ஜி.

எப்போதும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் படம் எடுக்க கூடியவர் மோகன் ஜி என்று ஒரு பெயர் அவருக்கு உண்டு. ஏற்கனவே த்ரெளப்தி, ருத்ரதாண்டவம் திரைப்படங்களிலேயே சில வாட்ஸாப் ஃபார்வேர்டு மெசேஜ்களை உண்மை போல படத்தில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் இவர் டேட்டிங் ஆப் குறித்து சேகரித்த விஷயங்களும் கூட அப்படியானதாக இருக்குமோ? என்கிற கேள்வி பலருக்கும் வந்துள்ளது.

மேலும் இந்த படம் பெண்கள் ஒழுக்கமாக இருப்பதை குறித்து முக்கியமாக பேசுகிறது. ஆனால் இதற்கு முன்பு செல்வராகவன் இயக்கிய பல படங்கள் இதற்கு எதிராக இருந்தன. அப்படி இருக்கும்போது செல்வராகவன் எப்படி இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்தார் என கேள்வி எழுகிறது.

இவையெல்லாம் படத்தின் தவறுகளாக இருந்தாலும் பலருக்கும் இந்த படம் பிடித்துள்ளது.

பிரதமரை விமர்சிப்பவர்கள்தான் இப்படி நடந்துக்குவாங்க! –  பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை குஷ்பு. பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக இருந்து வந்தவர் நடிகை குஷ்பு.

சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார் குஷ்பு, முன்னர் திமுகவில் இருந்த குஷ்பு தற்சமயம் பாஜக கட்சியில் செயல்ப்பட்டு வருகிறார்.

இதனால் அடிக்கடி பிரதமர் மோடிக்கு ஆதரவான பதிவுகளை இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்ட செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் ஒரு வீடியோவை இணைத்துள்ளார். அதில் வட இந்தியர்களை தமிழ்நாட்டு மக்கள் அடிப்பது தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டிருந்த குஷ்பு “அரசியம் மற்றும் சமூக ஊடகங்களில் மொழியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும். வட இந்தியர்களை தாக்குவது, பிரதமரை இழிவாக பேசுவது இதுதான் இவர்களின் வீரம். இதுக்குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பதிலளித்து வருகின்றனர். பிரதமரை எதிர்ப்பவர்கள் எல்லோரும் வட இந்தியர்களை எதிர்ப்பர்ப்பவர்கள் அல்ல. இருவரையும் குஷ்பு எப்படி சமமாக வைத்து பார்க்கிறார் என தெரியவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.

சக்ஸஸ் ஆகுமா வாத்தி! – படம் எப்படி இருக்கு! சுருக்கமான விமர்சனம்!

இயக்குனர் வெங்கி அல்துரி இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் வாத்தி. இதில் இவருக்கு ஜோடியாக நடிக சம்யுக்தா நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்புகள் வர துவங்கிவிட்டன.

தற்சமயம் படம் வெளியாகி இருக்கும் நிலையில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் சிலர் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

படத்தின் கதை:

படக்கதைப்படி சமுத்திரக்கனி நடத்தும் தனியார் பள்ளியில் கடைநிலை ஆசிரியராக பணிப்புரிகிறார் தனுஷ். அந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள 30 அரசு பள்ளிகளுக்கு இந்த கடைநிலை ஊழியர்களை அனுப்பி வைக்கிறார் சமுத்திரக்கனி.

அங்கு இருக்கும் மாணவர்களை நன்றாக படிக்க வைக்கும் பட்சத்தில் அவர்கள் நிரந்தர ஆசிரியராக மாற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது. நடிகர் தனுஷும் இதற்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளிக்கு செல்கிறார்.

அங்குள்ள மாணவ மாணவிகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக தனுஷ் எடுக்கும் நடவடிக்கைகளை கொண்டு முதல் பாதி செல்கிறது. அதற்கு பிறகு கல்வியில் இருக்கும் வியாபார அரசியலை கண்டறியும் தனுஷ். அதற்கு எதிராக மாறி செய்யும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு இரண்டாம் பாதி செல்கிறது.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் எமோஷனலாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பி.ஜி.எம் மற்றும் பாடல்களுக்கு ஜி.வி பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார்.

எப்படி இருந்தாலும் திரையரங்கில் பார்க்க ஏற்ற படமாக வாத்தி உள்ளது என கூறப்படுகிறது.

பாடகியா? நடிகையானு டவுட்டா இருக்கு! –  ஜொனிட்டா காந்தியின் புது புகைப்படங்கள்!

சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையானவர்கள் உண்டு. அழகாக கதாநாயகி ஆவதற்கான அம்சத்துடன் இருக்கும் பாடகிகள், மாடல்கள் நடிகை ஆவதுண்டு.

தமிழில் பல வருடங்களாக திரைப்படங்களில் பாடி வருவர் ஜொனிட்டா காந்தி. இவர் பாடகி என்றாலும் கூட சினிமா ரசிகர்களில் ஜொனிட்டா காந்திக்கும் ரசிகர்கள் உண்டு.

மாஸ்டர் படத்தில் அலபிப்போ ஹபிபோ பாடலை ஜொனிட்டா காந்திக்காக பார்த்த ரசிக பட்டாளமும் உண்டு.

இவர் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்ப்ரஸ் திரைப்படத்தில் முதன் முதலாக பாடகியாக அறிமுகமானார். அந்த படத்தில் எஸ்.பி.பி பாடிய சென்னை எக்ஸ்ப்ரஸ் என்னும் டைட்டில் பாடலை பாடியிருந்தார்.

அதை தொடர்ந்து பாடுவதற்கு வாய்ப்புகளை பெற்றார் ஜொனிட்டா. தொடர்ந்து பாலிவுட் படங்களுக்கு பாடல் பாடி வந்த ஜொனிட்டா 2018 ஆம் ஆண்டு தமிழில் சர்க்கார் படத்தில் பாடியிருந்தார்.

அதை தொடர்ந்து தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தற்சமயம அவரது புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

நான் கராத்தே கத்துக்க போறேன்! – ராஷ்மிகாவின் புது லுக்!

2016 முதல் வெள்ளி திரையில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா. 2016 முதலே படங்களில் நடித்து வந்தாலும் கூட 2018 இல் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார் ராஷ்மிகா. டியர் காம்ரேட், பீஷ்மா, புஷ்பா என தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையே நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அவருக்கு கதாநாயகியாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தற்சமயம் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ராஷ்மிகா ட்ரெண்ட் ஆகும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புடவையில் எப்படி இருக்கேன்? – அசத்தும் அனுபாமா!

மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன்.

அதிர்ஷ்டவசமாக முதல் படமே நல்ல ஹிட் படமாக அமைந்ததால் வந்த உடனேயே சினிமாவில் பிரபலமாகிவிட்டார் அனுபாமா.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வந்த அனுபாமா பரமேஸ்வரன் தென்னிந்தியாவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலுமே நடித்து விட்டார்.

தென்னிந்திய சினிமாவில் பெரிய மார்க்கெட் உள்ள இடம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகம் ஆகும். எனவே அனுபாமா தெலுங்கு திரையுலகம் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்சமயம் புடவை கட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இதுக்கு பேருதான் ரெயின்போ ட்ரெஸ் – பாலிவுட் நடிகையின் அசத்தல் போட்டோக்கள்!

பாலிவுட் சினிமாவில் எப்போதுமே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கோலிவுட் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை குறைத்து வருகிறது. ஆனால் பாலிவுட் சினிமா அதிகமான கவர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

பாலிவுட்டில் 2007 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ஹெலி தருவாலா. தொடர்ந்து வரிசையாக டிவி சீரிஸ்களில் நடித்து வந்தார்.

பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். ஆனால் கதாநாயகி ஆவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

என்ன அழகு எத்தனை அழகு? – க்ரீத்தி ஷெட்டியின் டாப் நாட்ச் புகைப்படங்கள்

தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கீர்த்தி ஷெட்டி அனைவருக்கும் பரிச்சையாமான ஒரு நட்சத்திரமாகவே இருக்கிறார்.

தற்சமயம் இளைஞர்களின் க்ரஷ் நடிகைகளில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர். இவர் நடித்த வாரியர் மற்றும் ஷாம் சிங்கா ராய் ஆகிய திரைப்படங்கள் தமிழில் டப்பிங்கில் வெளியாகின.

அதன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

வாரியர் படத்தில் வந்த புல்லட் பாடல் இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய பாடலாக அமைந்தது. இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். 

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை வெளியிடும் க்ரீத்தி ஷெட்டி தற்சமயம் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிவப்பு புடவைல ரொம்ப அழகா இருக்க? – பூஜா ஹெக்தேவின் டீசண்ட் லுக்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஆனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்தே.

இவர் முதன் முதலாக தமிழில் முகமூடி திரைப்படத்தில் நடித்தார். ஆனால் தமிழில் பெரிதாக இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முண்ணனி நடிகர்களாக உள்ள பலருடன் இவர் நடித்துவிட்டார். இதையடுத்து பாலிவுட் சினிமாவிலும் கூட பூஜா ஹெக்தேவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு தனிப்பட்ட தனது சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

வெகுநாட்களுக்கு பிறகு தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து மீண்டும் தமிழில் படம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் சிவப்பு புடவையில் பூஜா ஹெக்தே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

ஜொலிக்கும் உடையில் கவரும் யாஷிகா ஆனந்த்!

தமிழில் குறைவான அளவில் படம் நடித்திருந்தாலும் கூட மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த். 

கவர்ச்சி காட்சிகளுக்கு பெயர் பெற்றவர் யாஷிகா ஆனந்த். அவர் நடித்து வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு பிரபலமான திரைப்படமாக அமைந்தது.

இதற்கிடையில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் மூலமும் கூட வெகுவாக பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரளவு பட வாய்ப்புகளை பெற்றார்.

தற்சமயம் எஸ்.ஜே சூர்யா நாயகனாக நடித்த கடமையை செய் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திலும் கூட கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.