Movie Reviews
சக்ஸஸ் ஆகுமா வாத்தி! – படம் எப்படி இருக்கு! சுருக்கமான விமர்சனம்!
இயக்குனர் வெங்கி அல்துரி இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் வாத்தி. இதில் இவருக்கு ஜோடியாக நடிக சம்யுக்தா நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்புகள் வர துவங்கிவிட்டன.
தற்சமயம் படம் வெளியாகி இருக்கும் நிலையில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் சிலர் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
படத்தின் கதை:
படக்கதைப்படி சமுத்திரக்கனி நடத்தும் தனியார் பள்ளியில் கடைநிலை ஆசிரியராக பணிப்புரிகிறார் தனுஷ். அந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள 30 அரசு பள்ளிகளுக்கு இந்த கடைநிலை ஊழியர்களை அனுப்பி வைக்கிறார் சமுத்திரக்கனி.
அங்கு இருக்கும் மாணவர்களை நன்றாக படிக்க வைக்கும் பட்சத்தில் அவர்கள் நிரந்தர ஆசிரியராக மாற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது. நடிகர் தனுஷும் இதற்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளிக்கு செல்கிறார்.
அங்குள்ள மாணவ மாணவிகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக தனுஷ் எடுக்கும் நடவடிக்கைகளை கொண்டு முதல் பாதி செல்கிறது. அதற்கு பிறகு கல்வியில் இருக்கும் வியாபார அரசியலை கண்டறியும் தனுஷ். அதற்கு எதிராக மாறி செய்யும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு இரண்டாம் பாதி செல்கிறது.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் எமோஷனலாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பி.ஜி.எம் மற்றும் பாடல்களுக்கு ஜி.வி பிரகாஷ் சிறப்பாக இசையமைத்துள்ளார்.
எப்படி இருந்தாலும் திரையரங்கில் பார்க்க ஏற்ற படமாக வாத்தி உள்ளது என கூறப்படுகிறது.