News
நீரஜ் பாண்டேயுடன் இணையும் தமன்னா? பெயரிடப்படாமல் மறைத்து வைத்த திட்டம் வெளியானது!
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இன்று வரை இருந்து வருகின்றது.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.
இந்த நிலையில், நீரஜ் பாண்டேயின் அடுத்த பெயரிடப்படாத படத்தில் நடிக்க தமன்னா தமன்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை எனவும், படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது. பிப்ரவரி 24 அன்றே முதல் நாள் படபிடிப்பு தொடங்கிய இந்த பெயரிடாத படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது. மேலும், இது ஒரு திரையரங்க வெளியீடு அல்ல, ஒரு முன்னணி OTT தளத்தில் திரையிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிகின்றன.
நீரஜ் பாண்டே தற்போது தனது OTT நிகழ்ச்சியான ஸ்பெஷல் ஓப்ஸின் நடிகர்களில் இருந்து இந்த படத்திற்கான முன்னணி நடிகர்களை தேடிவருகிறார். இருப்பினும், இந்த பெயரிடப்படாத படம் குறித்து படக்குழு அமைதியாக இருப்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.
