அஜித் அப்படி பண்றது சரி கிடையாது!.. பல பேரோட உழைப்பு அது!.. ஓப்பன் டாக் கொடுத்த தமன்னா!.

தமிழில் கல்லூரி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்களில் நடித்தப்போது அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் தமன்னா. தெலுங்கிலும் கூட அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் விஜய் அஜித் மாதிரியான பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் வீரம் திரைப்படத்தில் இவர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். பொதுவாகவே கவர்ச்சியாக நடிக்கும் தமன்னாவை அதில் கொஞ்சம் குடும்ப பெண்ணாக மாற்றியிருப்பார் இயக்குனர் சிறுத்தை சிவா. அந்த சமயத்தில்தான் நடிக்கும் திரைப்படங்களில் தலையில் சாயம் பூசிக்கொள்ள மாட்டேன் என்கிற விதிமுறையை அஜித் கொண்டு வந்தார்.

thammanna
thammanna
Social Media Bar

தமன்னாவின் விளக்கம்:

தமன்னா மிகவும் இளமையாக இருந்ததால் அவர் அஜித்திற்கு ஜோடி போலவே தெரியவில்லை. இதனையடுத்து அப்போது பலரும் அஜித் தமன்னாவிற்கு அப்பா மாதிரி இருக்கிறார் என்று விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இதுக்குறித்து தமன்னாவிடம் பேசும்போது அவர் பேட்டியில் சில விஷயங்களை கூறி இருந்தார். ஒரு திரைப்படம் என வரும்போது அதில் நம் இஷ்டத்துக்கு எதையும் செய்ய முடியாது என நினைக்கிறேன். கதைக்கு எது தேவையோ அதை நடித்து கொடுக்கதான் நடிகர்கள் இருக்கிறோம். ஒரு படம் என்பது ஒரு நபர் சார்ந்தது மட்டும் கிடையாது.

பல பேர் இணைந்துதான் ஒரு திரைப்படம் உருவாகிறது. எனவே முடிவெடுக்கும்போதும் அந்த பல பேரின் முடிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் தமன்னா.