தமன்னாதான் முதலில் என்னை கூப்பிட்டாங்க!.. டேட்டிங் விவகாரத்தை பகிரங்கமாக உடைத்த காதலன்!.

தமிழ் சினிமாவில் தற்சமயம் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தமன்னா இருந்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட்டில் நடித்து வந்தது முதலே கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார் தமன்னா. தமன்னா பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற சீரிஸில் நடித்தார்.

அதில் அவருக்கு படுக்கையறை காட்சிகள் இருந்தன. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் கூட அவர் படுக்கையறை காட்சிகளில் நடித்தது கிடையாது. அப்படியிருக்கும்போது ஹிந்தியில் சென்று அவர் அப்படி நடித்ததால் அந்த சீரிஸ் தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானது.

அதனை தொடர்ந்து பாகுபாடு இல்லாமல் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார் தமன்னா. ஜெயிலர் திரைப்படத்தில் அவர் ஆடிய காவாளா பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் இவர் விஜய வர்மா என்கிற பாலிவுட் நடிகருடன் தான் நடித்தார்.

Social Media Bar

அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டானது. இந்த நிலையில் லிவிங் டு கெதர் உறவு முறையில் இருவரும் பழகி வருகின்றனர். சீக்கிரமே இருவரும் கல்யாணம் செய்துக்கொள்ள போவதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் எப்படி உங்கள் இருவருக்குமிடையே காதல் உண்டானது என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய வர்மா கூறும்போது முதலில் லஸ்ட் ஸ்டோரியில் நடித்தப்போது எங்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு உறவும் இருக்கவில்லை.

பிறகு லஸ்ட் ஸ்டோரி வெற்றி விழாவில் கலந்துகொள்ளும்போது ஒரு நாள் முழுக்க நாம் ஒன்றாக இருக்கலாமா என்று தமன்னா கேட்டார். அதனையடுத்து நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். அதற்கு பிறகுதான் எங்கள் இருவருக்குள்ளும் காதல் உண்டானது என்றாராம் விஜய வர்மா.

Source: link