Connect with us

குழந்தை பெத்துக்குறதே கஷ்டம்.. அதுக்கு வாய்ப்பில்லை.. நெப்போலியன் குறித்து பிரபலம் ஓப்பன் டாக்!.

tamil actor nepolean son

News

குழந்தை பெத்துக்குறதே கஷ்டம்.. அதுக்கு வாய்ப்பில்லை.. நெப்போலியன் குறித்து பிரபலம் ஓப்பன் டாக்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முக்கிய வில்லனாக வலம் வந்தவர் தான் நெப்போலியன். கம்பீரமான தோற்றத்துடன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலில் எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.

100க்கும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நெப்போலியன் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார். அமெரிக்காவில் ஒரு ஐடி நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி அதில் விவசாயமும் செய்து மகிழ்ச்சியாக தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் தற்பொழுது அவரின் மகன் தனுஷிற்கு செய்யப் போகும் திருமணத்தைப் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

நெப்போலியன் தமிழ் மொழியை தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நெப்போலியன் அமெரிக்கா செல்வதற்கு தன்னுடைய மகனின் உடல்நிலை தான் காரணம் என பல நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட மகன்

நெப்போலியன் மகன் தனுஷ் சதை பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர். ஆரம்ப கட்டத்தில் திருநெல்வேலிக்கு அருகில் இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நெப்போலியன் அமெரிக்காவில் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளித்து வந்தார். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட அமெரிக்காவிலேயே தன்னுடைய குடும்பத்துடன் தங்கிவிட்டார் நெப்போலியன். ஆனாலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் முழுமையாக சரியாகவில்லை.

Napoleon son marrige

நெப்போலியன் இப்படி செய்யலாமா?

தற்பொழுது முழுமையாக குணமாகாத தன்னுடைய மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்து உள்ளார் நெப்போலியன். நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மேலும் திருமணம் ஜப்பானில் நடக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சதை பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் இல்லற வாழ்கையில் ஈடுபட முடியாது. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள்18 வயதிற்குள்ளாகவே இறந்து விடுவார்கள்.

ஆனால் நெப்போலியன் மகனுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவர் 25 வயது வரை உயிருடன் இருப்பதாகவும், இது ஒரு ஆபத்தான நோய் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நேரத்திலும் என்ன வேண்டுமெனாலும் நடக்கலாம்.

tamil actor Napoleon

இவ்வாறு இருக்கையில் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு இவ்வாறு திருமணம் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் இவரை திருமணம் செய்ய போகும் பெண் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்றும் அவரின் சம்மதத்துடனும் அவரின் பெற்றோரின் சம்பந்தத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற உள்ளது.

பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலரும், தன்னுடைய மகனுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய கடமையை அவர் செய்கிறார் என்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

To Top