படத்துல வர்ற மாதிரி பண்ணிட்டீங்களே? – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிவின் பாலி

மலையாள சினிமாவில் உள்ள முண்ணனி நடிகர்களில் நிவின் பாலியும் ஒருவர். தமிழில் நேரம், ரிச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் மலையாள சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்துள்ளது.

அந்த வகையில் அவர் நடித்த பிரேமம் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது. பிரபலமாக இருந்து வந்த நிலையில் திடீரென நிவின் பாலிக்கு உடல் பருமன் அதிகரித்தது.

அதிக திரைப்படங்களில் உடல் பருமனுடனே காணப்பட்டார். உடல் பருமனால் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து போனது. இதனால் உடலை குறைக்கும் முயற்சியில் இறங்கினார் நிவின் பாலி.

தொடர்ந்து உடற்பயிற்சி மேற்க்கொண்டு தற்சமயம் உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். படங்களில் கதாநாயகர்கள் ஒரே பாடலில் உடல் எடையை குறைப்பது போல நிவின் பாலி உடல் எடையை குறைத்துள்ளார் என பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

Refresh