படப்பிடிப்பு முடியும் முன்பே கோடி கணக்கில் வியாபாரமா? –  சூர்யா 42 வசூல் விபரம்!

நடிகர் அஜித்தை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்து இயக்கி வரும் திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தின் போஸ்டர்களே மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானது.

பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு இன்னும் பல நடிகர்/ நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இது ஒரு சரித்திர படம் என கூறப்படுகிறது. படத்தின் மோஸ்டர் போஸ்டரிலும் கூட சூர்யா ஒரு அரசன் கெட்டப்பில்தான் இருந்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுகிறது. மேலும் 10 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. எனவே இது நடிகர் சூர்யாவிற்கு முக்கியமான படமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி உரிமம் மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாகும் முன்பே இவ்வளவு வசூல் செய்திருப்பதால் படம் வெளியான பிறகு இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh