Connect with us

பொண்ணுக்கு 24 பையனுக்கு 44 – இளம் பெண்ணை காதலிக்கு ப்ரேம் ஜி!..

premgi

News

பொண்ணுக்கு 24 பையனுக்கு 44 – இளம் பெண்ணை காதலிக்கு ப்ரேம் ஜி!..

Social Media Bar

Actor Premgi : இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமானவர். வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் பிரேம்ஜியை பார்க்க முடியும்.

பிரேம்ஜிக்கு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு அவரது திரைப்படத்தில் எப்போதும் கொடுத்து வந்தார். இது இல்லாமல் ஒரு சில படங்களில் பிரேம்ஜி பாடலும் இசைத்துள்ளார். பிரேம்ஜியின் காமெடிக்கு மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்தது.

அதனால் தான் தொடர்ந்து வெங்கட் பிரபுவும் அவரது திரைப்படங்களில் பிரேம்ஜிக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து வந்தார். இந்த நிலையில் 40 வயதை கடந்த பிறகும் கூட சிம்புவை போலவே பிரேம்ஜியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.

இந்நிலையில் தற்சமயம் அந்த அப்டேட்டின் படி பிரேம்ஜி ஒரு 24 வயது இளம்பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பிரேம்ஜியின் வயது 44 ஆகும். தன்னைவிட 20 வயது குறைவான ஒரு பெண்ணை அவர் காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

திருமண வயதை பொருத்தவரை அரசின் விதிகளின்படி 21 வயது நிறைவடைந்தால் போதுமானது என்பதால் இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று ஒரு சாரார் பேசி வந்தாலும் வயதிற்கு ஏற்ற அளவில் ஒரு பெண்ணைதானே பிரேம்ஜி திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு பக்கம் பேச்சுக்களும் இருக்கின்றன. ஆனால் இது காதல் திருமணம் தான் என்று கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top