கட்சிக்கு பேர் வைப்பதிலும் சினிமா முறையை பின்பற்றிய விஜய்!.. ஓ இதுதான் காரணமா!..

Actor Vijay: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக இருந்து வந்தார். மக்கள் செல்வாக்கை அதிகமாக பெற்றுள்ள விஜய் தற்சமயம் கட்சி துவங்கியிருப்பதுதான் பெரும் பேசு பொருளாக இருந்து வருகிறது.

கடந்த சில காலங்களாகவே விஜய் கட்சி துவங்குவதாக பேசி வந்தார். அவரது திரைப்படங்களிலும் கூட அரசியல் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் கட்சி துவங்கியிருப்பதற்கு அரசியல் தலைவர்கள் சிலரும் கூட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளார் விஜய். இந்த நிலையில் இந்த கட்சியில் பெயர் குறித்து பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

vijay
vijay
Social Media Bar

முக்கியமாக கட்சியின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக வெற்றி(க்) கழகம் என்றுதான் இருக்க வேண்டும் க் போடவில்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருக்கிறது. இதுக்குறித்து திரைப்பத்திரிக்கையாளர்கள் கூறும்போது பொதுவாக சினிமாவில் படங்காளுக்கு பெயர் வைக்கும்போது இந்த விதிமுறையை பின்பற்றுவதாக கூறுகிறார்கள்.

படங்களுக்கு பெயர் வைக்கும்போது அதில் நடுவில் மெய்யெழுத்துக்கள் வரும் இடங்களில் பெரும்பாலும் அதை போட மாட்டார்களாம். அப்படி போட்டால் அந்த படம் தோல்வியை கண்டுவிடும் என்பது சினிமாவில் ஒரு நம்பிக்கை, அதையே தனது கட்சி பெயரிலும் விஜய் பின்பற்றியுள்ளார். என கூறப்படுகிறது.

Vijay-Thalapathy
Vijay-Thalapathy

அதே போல விஜய் சிறு வயதில் வெற்றி என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதனால்தான் இந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது என்பது ஒரு சாராரின் வாதமாக இருக்கிறது. ஆனால் சிறு வயதில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் விஜய்.

மேலும் இன்னும் சில ரசிகர்கள் கூறும்போது விஜய்யின் கட்சி பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என குறிப்பிடுகின்றனர். அதற்கு தளபதி விஜய் கழகம் என்று அர்த்தம் என புதிய புகையை போட்டு வருகின்றனர். எப்படி இருந்தாலும் விஜய் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டே கட்சியை துவங்கியுள்ளார் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.