Gossips
நம்பர் நடிகைக்கும் மாஸ் நடிகருக்கும் இடையே ரகசிய உறவு!.. வெளிநாட்டில் ஒரே ஜாலிதான்..
வெகு காலங்களாகவே பெரும் நடிகர்களுடன் கிசு கிசுப்பில் இருந்து வருகிறார் இந்த நம்பர் நடிகை. சமீபத்தில் கூட இவரது மறுப்பக்கத்தை திரை பிரபலம் ஒருவர் அம்பலப்படுத்தினார். அதற்கு இவர் மறுப்பு கூட எதுவும் கூறலாமல் இருந்து வந்தது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்சமயம் மாஸ் நடிகர் மனைவி மற்றும் குழந்தைகளை எல்லாம் விட்டு விட்டு இந்த நடிகையே கதி என கிடக்கிறாராம். தற்சமயம் கோடம்பாக்கம் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறதாம்.
கோடம்பாக்கம் சினிமா:
தொடர்ந்து நம்பர் நடிகையும் மாஸ் நடிகரும் கோடாம்பாக்கத்திலேயே தங்கி வருவதால் நடிகரின் குடும்பத்தார் விரக்தியடைந்துள்ளாராம்.
இதற்கு நடுவே அம்மாவை விடுத்து அப்பா இப்படி நடிகையுடன் எப்போது இருக்கிறாரே என கடுப்பான மகன் தற்சமயம் தந்தையை விட்டு தனக்கான வாழ்க்கையை தானே தேடி கொள்கிறேன் என விலகிவிட்டாராம்.
கடுப்பான மகன்:
இதனையடுத்து இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தற்சமயம் வெளிநாடு சென்ற நடிகர் அங்கே நடிகையுடன் உல்லாசமாக உலாவி வருகிறாராம். நடிகைக்கு குடும்பம் குட்டி என எதுவும் இல்லாததால் அவருக்கு இந்த மாதிரி பிரச்சனை எதுவும் வரவில்லை.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்