Tamil Cinema News
லட்சங்களில் செலவு பண்ணி நடிகைகள் சும்மா அதை பண்ணுராங்க..! அலட்சியமாக நிராகரித்த சாய்பல்லவி..!
நடிகைகள் தொடர்ந்து தங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏகப்பட்ட விஷயங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் முக்கியமான விஷயம் தான் பிரமோஷன் என்கிற விஷயம்.
முன்பெல்லாம் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பத்திரிகைகளில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதற்காக அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய வண்ணம் இருப்பார்கள்.
ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்களின் வளர்ச்சி உருவான காரணத்தினால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள். இதற்காகவே பி ஆர் என்கிற ஒரு ஆளை ஒவ்வொரு நடிகைகளும் நியமித்துக் கொள்வது உண்டு.
அவர்கள் எப்போதுமே நடிகைகளை பிரபலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இது குறித்து சமீபத்தில் சாய் பல்லவி சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் சாய் பல்லவி கூறும் பொழுது ஹிந்தியில் இருந்து ஒருவர் எனக்கு பி ஆர் ஆக இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் அவரிடம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.
ஓப்பன் டாக் கொடுத்த சாய்பல்லவி:
அப்பொழுது நாங்கள் உங்களை பிரபலப்படுத்திக் கொண்டே இருப்போம் என்று அவர் கூறினார். நீங்கள் வாய்ப்புகள் இல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லாமல் இருக்கும் சமயத்தில் கூட தொடர்ந்து உங்களை பிரபலப்படுத்திக் கொண்டிருப்போம் என்று அவர் கூறினார்.
அதனால் எனக்கு வாய்ப்புகள் வருமா என்று நான் கேட்டேன். இல்லை வாய்ப்புகள் பெரிதாக வராது ஆனால் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாக நீங்கள் இருப்பீர்கள் என்று கூறினார்.
தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டிருந்தால் அவர்களுக்கு போர் அடித்து விடும் எனவே எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி. பல நடிகைகள் லட்சங்களில் செலவு செய்து பி.ஆர்களை வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்த சாய்பல்லவி மாறுபட்ட கருத்திற்கு ஆதரவுகள் வந்தவண்ணம் உள்ளன.
