Connect with us

உடை மாற்றும் அறையில் நுழைந்த இயக்குனர்… ஆடிப்போன நடிகை.!

Tamil Cinema News

உடை மாற்றும் அறையில் நுழைந்த இயக்குனர்… ஆடிப்போன நடிகை.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்கு மட்டுமே முதல் படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும். அப்படியாக முதல் திரைப்படத்தின் மூலமாகவே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஷாலினி பாண்டே.

இவர் முதன்முதலாக அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனாலும் கூட அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

தொடர்ந்து ஷாலினி பாண்டேவிற்கு சில பட வாய்ப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சினிமா அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் ஷாலினி பாண்டே.

அதில் அவர் கூறும் பொழுது நான் சினிமாவில் பணிபுரியும் பொழுது என்னுடன் இருந்தவர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்று கூறிவிட முடியாது. எனக்கு பயத்தை ஏற்படுத்தும் நபர்களுடன் நான் இருந்திருக்கிறேன்.

நான் சினிமா பின்னணியை சேர்ந்தவள் கிடையாது. சாதாரண குடும்பத்தில் இருந்து தான் சினிமா துறைக்கு வந்தேன். எனவே சினிமா துறை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.

நான் அந்த சமயத்தில் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது படத்தின் இயக்குனர் எனது கேரவனுக்குள் திடீரென நுழைந்துவிட்டார். அப்பொழுது நான் உடைமாற்றிக் கொண்டிருந்தேன் அவர் கதவை கூட தட்டாமல் உள்ளே வந்துவிட்டார்.

அதற்கு முன்பு நான் ஒரு திரைப்படத்தில்தான் நடித்திருந்தேன். அந்த இயக்குனர் உள்ளே நுழைந்ததும் நான் எதையுமே யோசிக்கவில்லை வெளியே போங்கள் என்று கத்தி விட்டேன். அப்பொழுது எனக்கு 22 வயது தான் ஆகி இருந்தது பலரும் என்னிடம் அப்படித்தான் நான் கத்தி இருக்கக் கூடாது என்று கூறினார்கள் ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அந்த சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார் ஷாலினி பாண்டே.

To Top