Tamil Cinema News
கல்யாணம் பண்ணி ஒரு வருஷமா அது நடக்கல.. அப்புறம் எப்புடி? தொகுப்பாளருக்கு பதிலளித்த நடிகை சுகன்யா..!
புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நட்சத்திரங்களில் சுகன்யாவும் ஒருவர்.
சுகன்யா தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் பொதுவாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டினால் சினிமாவில் வெற்றி பெற முடியும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த பொழுது புடவை கட்டிக்கொண்டு கூட ரசிகர்களிடம் வரவேற்பு பெற முடியும் என்று நிரூபித்தவர் நடிகை சுகன்யா.
நடிகை சுகன்யா
ஆனால் நடிகை சுகன்யாவும் சில படங்களில் மாடர்ன் உடையில் நடித்திருக்கிறார் என்றாலும் பெரும்பாலும் இவரை புடவை கட்டிதான் பார்க்க முடியும். சின்ன மாப்பிள்ளை, திருமதி பழனிச்சாமி மாதிரியான படங்களில் படம் முழுக்கவே அவர் புடவை கட்டி நடித்திருப்பதை பார்க்க முடியும்.

இவ்வளவு ஏன் கமலுடன் சேர்ந்து நடித்த இந்தியன் திரைப்படத்தில் கூட அப்படித்தான் அவர் நடித்திருந்தார். இப்படி பெரும் நடிகர்களுடன் நடித்த போது கூட தனக்கென ஒரு கோடு போட்டு அதில் பயணித்து வந்தவர் நடிகை சுகன்யா தற்சமயம் மீண்டும் வெப் சீரிஸ்கள் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாக இருக்கிறார்.
ஏனெனில் முன்பை விட இப்பொழுது சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. மேலும் அதிக வயதாக இருந்தாலும் கூட நடிகைகள் நடிப்பதற்கான வாய்ப்புகளும் சினிமாவில் அதிகமாக உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் இவரை குறித்து வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் சுகன்யா.
புதிய சர்ச்சை:
ஒரு சமயம் கோவிலுக்கு ஒரு குழந்தையுடன் அவர் சென்றிருந்தார். அந்த குழந்தை சுகன்யாவின் குழந்தை தான் என்றும் அதை வெளியில் காட்டாமல் அவர் வளர்த்து வருகிறார் என்றும் பேசப்பட்டது.

இது குறித்து பேசிய சுகன்யா எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஒன்றாக எனது கணவருடன் வாழவில்லை. அதற்குள் நாங்கள் பிரிந்து விட்டோம். அப்படி இருக்கும்பொழுது எனக்கு எப்படி குழந்தை இருக்கும் அது எனது சகோதரியின் குழந்தை.
நாங்கள் எல்லாம் குடும்பமாக சேர்ந்து ஒரு முறை கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்பொழுது எடுத்த புகைப்படம்தான் அது. ஆனால் அதை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு குழந்தை பிறந்து விட்டது என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் சுகன்யா.
