இளம் நடிகர்களால் வரும் பிரச்சனை.. ஓப்பன் டாக் கொடுத்த காமெடி நடிகை..!
தமிழில் நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சுமதி. முக்கியமாக வடிவேலுவுடன் இவர் சேர்ந்து நடித்திருக்கும் நிறைய காமெடிகள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில் சுமதி சினிமா துறையில் இருக்கும் பல விஷயங்களை தற்சமயம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய கணவர்தான் என்று கூறியிருந்தார்.
சினிமாவில் என்ன மாதிரியான பிரச்சனைகள் உங்களுக்கு வருகின்றன என்று கேட்ட பொழுது சுமதியின் கணவர் அதற்கு பதில் அளித்து இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது சினிமாவிற்கு வரும் இளம் நடிகர்கள் துடிப்பாக நடிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
ஆனால் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கும் வயதான நடிகர்களால் அப்படி தொடர்ந்து நடிக்க முடியாது. சில நேரம் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும். அப்பொழுது ஓய்வு கொடுத்து நடிக்க வேண்டும். ஆனால் இளம் நடிகர்களை பொருத்தவரை ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருப்பார்கள்.
அதனால் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் மற்ற நடிகர்களும் அப்படியே நடிக்க வேண்டி உள்ளது. சுமதியும் அந்த மாதிரி நிறைய நேரங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் அவருடைய கணவர்.