நான் நடிச்சதுலையே இந்த படம் மொக்கை.. நடிச்ச பிரபலங்களே காரி துப்பிய திரைப்படங்கள்!.

சினிமாவில் பல வெற்றி படங்களையும், பல தோல்வி படங்களையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு சில படங்கள் தோல்வியில் முடியும். அதற்குக் காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு படத்தின் கதை அல்லது வசனம் போன்றவை ஏதோ ஒன்றின் காரணமாக அந்த படங்கள் ஓடாமல் தோல்வியில் முடிந்திருக்கும்.

பல முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடித்து அந்தப் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் திரையரங்குகளில் வெளிவரும்போது அந்த படம் தோல்வியில் முடிந்திருக்கலாம். மேலும் அவ்வாறு தோல்வியில் முடியும் போது, ஒரு சில நடிகர்கள், தயாரிப்பாளர், இயக்குனர்கள் அதனை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் படம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் வெளியிடப்பட்டு கடைசியில் அது தோல்வியில் முடிந்திந்திருக்கும்.

ஆனால் தற்பொழுது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஒரு சில நடிகர், இயக்குனர்களுக்கு தெரிந்து விடும். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையாது எனவும் கூறி விடுவார்கள். அதேசமயம் சில படங்களில் நான் ஏன் தான் நடித்தேனோ எனவும் ஒரு சில நடிகர்கள் வருத்தப்படுவதுண்டு.

ajith kumar
Social Media Bar

அந்த வகையில் ஒரு சில நடிகர், நடிகைகள் ஏன் இந்த படத்தில் நடித்தோம் என வருத்தப்பட்டு சில பேட்டிகளில் கூறியிருப்பார்கள். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபலங்கள் வருத்த திரைப்படம்

ஜி

ஜி திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தை லிங்குசாமி எழுதி இயக்கிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா நடித்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது லிங்குசாமிக்கு விருப்பம் இல்லையாம். மேலும் அஜித்திற்கும் விருப்பம் இல்லையாம். மேலும் ஏதாவது நடந்து இந்த பிலிம் மொத்தமும் அழிந்து விடாதா எனவும் அவர் கூறியிருக்கிறார்.

திரௌபதி திரைப்படம்

richard sheela

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் திரைப்படம் திரௌபதி. இந்த படத்தில் சீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு இந்த படத்தின் கதையை முழுமையாக கூறவில்லை என்றும், மேலும் இவ்வாறு படத்தில் அரசியல் இருப்பது தெரிந்திருந்தால், நான் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நடிகை மும்தாஜ்

mumthaj

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது சற்று கவர்ச்சியாக நடித்திருக்கிறார். ஆனால் தற்பொழுது நான் படத்தில் நடித்ததை நினைத்து வேதனைப்படுகிறேன். யாரும் தயவு செய்து என்னுடைய பழைய படங்களின் புகைப்படங்களை பகிர வேண்டாம். நான் தற்பொழுது கடவுளிடம் மன்னிப்பு கேட்டு உள்ளேன். அதனால் நான் நடித்த எல்லா படங்களையும் வெறுக்கிறேன் என மும்தாஜ் கூறியுள்ளார்.