பெரிய நடிகர்கள் பெரிய வளர்ச்சியை அடைந்த பிறகு அதற்கு உதவியாக இருந்த சின்ன நடிகர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முக்கிய ஆர்ட்டிஸ்டாக இருந்து வந்தவர் நடிகர் கிங்காங். சமீபத்தில் கிங்காங் மகள் திருமணம் கோலாகலமாக நடந்தது.
இந்த திருமணத்திற்கு அவர் முக்கிய பிரமுகர்கள் பலரையும் அழைத்து இருந்தார். ஆனால் திருமண நாளன்று எந்த பெரிய பிரபலங்களும் திருமணத்திற்கு வருகை தரவில்லை. இது சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரிய பேசுபொருளானது.
இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு பிரபலமும் சாமானிய மனிதர்களின் திருமணத்திற்கு சென்றதே கிடையாது.
எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் மட்டும் பெரும்பாலும் சாமானியர்களின் திருமணத்திற்கு சென்று விடுவார். நிறைய பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் ஆனால் அவருக்கு பிறகு வந்த கமல், ரஜினி, விஜய், அஜித் என்று எந்த ஒரு நடிகரும் சாமானிய மக்களின் திருமணத்திற்கு சென்றது கிடையாது.
இது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூறி இருக்கிறார் பாலாஜி பிரபு.