Cinema History
பெரும் புத்தகம் எல்லாம் படிக்காமலேயே அந்த ரேஞ்சுக்கு படம் எடுத்த பாக்கியராஜ்!.. அதிர்ந்து போன நடிகர்.. எப்படிங்க!..
Director bhagyaraj : 16 வயதினிலே திரைப்படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராவதற்கான முதல் படியை எடுத்து வைத்தார் இயக்குனர் பாக்கியராஜ்.
கிராமத்தில் இருந்து எளிதாக படமெடுத்து விடலாம் என சென்னைக்கு வந்த பாக்கியராஜ்க்கு பிறகுதான் படமெடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரிந்தது. அதன் பிறகு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பாக்கியராஜ் பாரதிராஜா மாதிரி படம் எடுக்காமல் முற்றிலும் மாறுப்பட்ட திரைப்படங்களாக எடுத்தார்.
பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாகவே இருந்தன. அப்படியாக அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தை எடுத்து கொண்டிருந்தார் பாக்கியராஜ். அந்த படத்தில் நடிகர் ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
அவர் பாக்கியராஜை பார்த்து ஒரு ஆங்கில திரைக்கதை புத்தகத்தின் பெயரை கூறி அதை படித்துள்ளீர்களா என கேட்டுள்ளார். உடனே பாக்கியராஜ் இல்லை நான் ஆங்கில புத்தகங்களே படித்ததில்லை என கூறியிருக்கிறார். அதற்கு ராஜேஷ் இல்லை நீங்கள் படித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இது என்ன வம்பா போச்சு நான் படிக்காத புத்தகத்தை படிச்சதா சொல்றாரே என யோசித்த பாக்கியராஜ், இல்லங்க நான் படிக்கவே இல்லை என திட்டவட்டமாக கூறினார். அதன் பிறகுதான் ராஜேஷ் சில விஷயங்களை கூறினார். அதாவது அந்த ஆங்கில புத்தகத்தில் திரைக்கதை எப்படி அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கும்.
படம் துவங்கும்போதே ரசிகர்களுக்கு சுவாரசியம் தரும் விஷயங்களை வைக்க வேண்டும். 100 ரீல்களுக்குள் படத்தின் முக்கிய கதை வந்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் எல்லாம் அந்த ஏழு நாட்கள் படத்தில் அப்படியே இருந்தன. அதனால்தான் ராஜேஷ் அந்த கேள்வியை கேட்டிருந்தார். அந்த புத்தகங்களை படிக்காத போதும் இயற்கையாகவே இந்த விஷயங்களை செய்திருந்தார் பாக்கியராஜ்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்