Connect with us

அப்பா உதவியே வேண்டாம்னு மாஸா சொன்ன நடிகர்.. இப்ப அந்த காரணத்துக்காக அப்பாவை தேடுறார்..!

gossip

Gossips

அப்பா உதவியே வேண்டாம்னு மாஸா சொன்ன நடிகர்.. இப்ப அந்த காரணத்துக்காக அப்பாவை தேடுறார்..!

Social Media Bar

நடிகர்களின் வாரிசுகள் சினிமாவிற்கு வருவது என்பது ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. காலம் காலமாக தமிழ் சினிமாவில் இது நடந்து வருகிறது.

எந்தவித பப்ளிசிட்டியும் இல்லாமல் நடிகருடைய வாரிசு என்பதையும் தனது தந்தை நடிகர் என்பதையும் வெளியில் சொல்லாமல் சினிமாவிற்குள் கமுக்கமாக வந்து பெரும் பிரபலமான பிறகு அதை வெளிய கொண்டு வரும் சில நடிகர்கள் உண்டு.

வாரிசு நடிகர்கள்:

உதாரணத்திற்கு நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் சினிமாவிற்குள் அறிமுகமாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பலருக்கும் அவர் மம்முட்டியின் மகன் என்பதே தெரியாது. பிறகு தாமதமாகத்தான் அவர் மம்முட்டியின் மகன் என்பதை அறிந்து கொண்டனர்.

gossips
gossips

ஆனால் சில பிரபலங்களோ சினிமாவிற்குள் வரும் பொழுதே தான் யாருடைய மகன் என்பதை கூறிவிடுவார்கள். பெரும்பாலும் இப்படி தான் சினிமாவில் நடிகர்கள் வருவதுண்டு.

இப்படி சமீபத்தில் வில்லன் ஹீரோ என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பெயர் வாங்கிய பெரும் நடிகர் ஒருவரின் மகன் கதாநாயகனாக களமிறங்கினார்.

தந்தையை தாண்டிய மகன்:

கதாநாயகனாக களம் இறங்கும் போது தனது தந்தையின் அடையாளத்தை பயன்படுத்தி முன்னுக்கு வருவதில் விருப்பமில்லை தனிப்பட்ட நபராக நான் முன்னுக்கு வர நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் தந்தையின் அடையாளத்தின் மூலமாகதான் அவருக்கு அந்த படத்தில் வாய்ப்பே கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு அந்த பேட்டி மிகுந்த சர்ச்சையானது. அடுத்து இனி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்று அமைதியாக இருந்து விட்டார் இந்த நடிகர்.

இந்த நிலையில் அவர் நடித்த திரைப்படம் குறித்து பெரிதாக வரவேற்பு எதுவும் மக்கள் மத்தியில் தென்படவில்லை. அந்த திரைப்படம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

சமீபத்தில் அந்த திரைப்படம் குறித்த ட்ரெய்லர் வெளியான பொழுதும் கூட அந்த திரைப்படம் பேசுப்பொருளாக ஆகவில்லை இதனை தொடர்ந்து தந்தையின் உதவி இருந்தால் மட்டும்தான் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பை பெற முடியும் என்பதை உணர்ந்த அந்த வாரிசு நடிகர் தற்சமயம் தந்தையிடம் உதவி கேட்டு நிற்கிறாராம்.

To Top