சிங்கிளா இருக்குறதுதான் சிறப்பு! – சிங்கிள்களுக்கு சப்போர்ட்டாக அனுஷ்கா செய்த விஷயம்!
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு மாஸ் காட்டும் வகையில் பல வகையான திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளன. ஆனால் கதாநாயகிகளுக்கு கெத்து காட்டுவது போல பெரிதாக கெத்து காட்டி வந்த படங்களில் அருந்ததி திரைப்படத்திற்கு இணையான ஒரு தமிழ் திரைப்படம் கிடையாது.
அனுஷ்காவின் மொத்த சினிமா வாழ்க்கையையும் மாற்றி அமைத்த திரைப்படம். அதன் பிறகு அனுஷ்கா தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார்.

ஆனால் அவரது உடல் பருமன் காரணமாக சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்க முடியாமல் போனது. இதையடுத்து பட வாய்ப்புகளை இழந்த அனுஷ்கா தனது உடலை குறைக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
தற்சமயம் இன்ஸ்டாவில் புது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாரிஸ் நகரில் அனுஷ்கா இருக்கும் புகைப்படம் உள்ளது. அதில் ஹாப்பி சிங்கிள் என்னும் புத்தகத்தை கையில் வைத்துள்ளார் அனுஷ்கா.
தற்சமயம் அனுஷ்கா நடித்து வரும் படத்தின் போஸ்டர்தான் இந்த பிக்சர் என்றாலும் சிங்கிள்கள் இந்த போட்டோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.