News
கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா!.. டிவி தொகுப்பாளரை பாலியல் கொடுமை செய்த கோவில் சாமியார்!..
சமீபத்தில் சென்னையில் சாமியார் ஒருவன் செய்த குற்றம்தான் பெரும் பேசு பொருளாகி வருகிறது. பொறியாளருக்கு படித்த பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலே சென்னையில் தொகுப்பாளராக வேலை தேடி வந்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அந்த ஏரியாவில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கிருந்த சாமியாரான கார்த்திக் என்பவர் சிறப்பு தரிசனம் குறித்து தகவல் கூறுவதாக கூறி அந்த பெண்ணிடம் போன் நம்பர் வாங்கியுள்ளார்.
போனில் அடிக்கடி பேசி அவரிடம் நண்பராகியுள்ளார் கார்த்தி. அதன் பிறகு ஒரு நாள் அவரது வீட்டிற்கு வந்த கார்த்தி அம்மன் தீர்த்தம் என கூறி அதில் போதை மருந்தை கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். அவர் மயங்கிய பிறகு அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
மயக்கம் தெளிந்து விஷயமறிந்த அந்த பெண் கோபடமடைந்தப்போது அவரை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சமாதானம் செய்துள்ளார் கார்த்தி. ஆனால் அதற்கு பிறகு அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறவும் கார்த்திக்கு பயம் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமலே அவரது கருவை கலைத்துள்ளார் கார்த்தி. மேலும் தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தது மட்டுமில்லாமல் அவரை விபச்சாரம் செய்ய சொல்லியும் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் கடுப்பான அந்த டிவி தொகுப்பாளர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்துள்ளார்.
