News
நாலு ஆண்களுக்கு அதை செஞ்சி இருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகை குஷ்பூ..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த நடிகைகளில் குஷ்பூவும் ஒருவர். அப்போது பாலிவுட் சினிமாவில் இருந்த அதிக காம்படிஷன் காரணமாக தமிழ் சினிமாவில் வாழ்க்கை பெறலாம் என்று முயற்சி செய்து தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
குஷ்பூ தர்மத்தின் தலைவன் திரைப்படம் மூலமாக முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் குஷ்பூ. ஆனால் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை. தொடர்ந்து வருஷம் 16 திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
குஷ்புவிற்கு வந்த வாய்ப்பு:
தமிழ் சினிமா அப்பொழுது பாலிவுட் சினிமா அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. ஆரம்ப காலகட்டங்களில் பாலிவுட் சினிமாவில் நடித்து வந்ததால் அங்கு கொஞ்சம் சொகுசாக இருந்து வந்தார் குஷ்பூ. ஆனால் தமிழ் சினிமாவில் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஏனெனில் தமிழ் சினிமா அப்போதுதான் வளர்ந்து வந்து கொண்டிருந்தது உதாரணத்திற்கு பாலிவுட் சினிமாவில் கேரவன் வசதி எல்லாம் அப்பொழுதே இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி எந்த வசதிகளும் கிடையாது. இந்த நிலையில் குஷ்பூ படப்பிடிப்பு தளங்களில் உடை மாற்ற வேண்டும் என்றால் லைட் மேன் நான்கு பேரை அழைத்து அவர்கள் கையில் புடவையை கொடுத்து குஷ்பூவுடன் அனுப்பி விடுவார்கள்.
ஆரம்பக்கட்ட பிரச்சனைகள்:
அந்த புடவையை சுற்றி பிடித்துக் கொள்வார்கள். இந்த லைட் மேன் நபர்கள் பிறகு குஷ்பூ உடை மாற்றிக் கொள்வார். இது குறித்த அவர் பேட்டியில் கூறும்பொழுது அப்பொழுது வெட்ட வெளியில் நான்கு ஆண்களுக்கு நடுவில் உடை மாற்றும் போது கூட எனக்கு பயம் வந்தது கிடையாது.

ஏனெனில் அந்த நால்வரும் என்னை தவறான பார்வையில் பார்த்தது கிடையாது. ஆனால் இப்பொழுது என்றால் கண்டிப்பாக பயப்பட வேண்டும் இப்பொழுது இணையம் கேமரா எல்லாம் வந்துவிட்டது. எனவே இப்பொழுது மாற்ற வேண்டும் என்றால் நான் அதற்காக பயப்படுவேன். ஆனால் அப்பொழுது காருக்குள் சென்று கூட உடையை மாற்றிக் கொண்டு வந்து நடித்திருக்கிறேன் என்று கூறுவர் நடிகை குஷ்பூ.
