Connect with us

1500 கோடிக்கு ஆசைப்பட்டு காதலனை மாற்றிய நடிகை.. கண்ணீரில் நின்ற நடிகர்..

Gossips

1500 கோடிக்கு ஆசைப்பட்டு காதலனை மாற்றிய நடிகை.. கண்ணீரில் நின்ற நடிகர்..

சினிமாவில் உடை மாற்றுவதை போல காதலர்களை மாற்றுவது என்பதும் நடந்து வருகிறது. சினிமாவில் காதல் தோல்விகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

தொடர்ந்து நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் தோல்வி ஏற்படுகிறது அல்லது கணவன் மனைவியாக இருக்கும் பிரபலங்களுக்கிடையே விவாகரத்து நடைபெறுகிறது. இப்படியாக தற்சமயம் நடந்த காதல் தோல்வி ஒன்றுதான் தெலுங்கு சினிமாவில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமாவில் பெரிய சீனியர் நடிகையாக இருந்த இந்த நடிகை வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வருகிறார். ஆனால் இப்பொழுதெல்லாம் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

நடிகை போட்ட ப்ளான்:

ஏனெனில் கொஞ்சம் வயதான காரணத்தினால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. மேலும் தெலுங்கு சினிமாவில் புதுப்புது கதாநாயகிகள் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அதனால் பழைய நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ராஸ்மிகா மந்தனா மாதிரியான நடிகைகளே வாய்ப்புகளை இழக்க துவங்கும் பொழுது இவர் அவருக்கு முன்பிருந்தே இருக்கும் சீனியர் நடிகை என்பதால் இவரும் வாய்ப்புகளை இழக்கத் தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் 1500 கோடி சொத்துக்களை கொண்ட அரசியல் பிரபலம் ஒருவரிடம் காதல் கொண்டு வருகிறார் இந்த நடிகை. அந்த அரசியல்வாதிக்கு தற்சமயம் திருமணத்தின் மீது ஈடுபாடு இருந்து வந்த காரணத்தினால் அவருக்கு ஓ.கே சொல்லி அவரை திருமணம் செய்திருக்கிறார்.

இரண்டாவது தாரம்:

இந்த அரசியல் பிரபலம் முதல் திருமணம் ஆகி அதில் விவாகரத்து பெற்றவர் இருந்தாலும் கூட இரண்டாவது தாரமாக அவரை திருமணம் செய்து கொள்ள இந்த நடிகை சம்மதித்து இருக்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் முக்கியமான நடிகர் ஒருவரை இவர் காதலித்து வந்திருக்கிறார்.

ஆனால் அந்த நடிகருக்கு சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் எதுவும் பெரிதாக ஓடாமல் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இதனால் கடன் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார் இந்த நடிகர். இதனை அறிந்த நடிகை அவரை கழட்டி விட்டுவிட்டு தற்சமயம் இந்த 1500 கோடி பிரமுகரை திருமணம் செய்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகை எவ்வளவு உஷாராக வேலை செய்து இருக்கிறார் என்று பேசி வருகின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

aravind samy
actress sruthi raj
bigg boss season 8 tamil
pooja hegde vijay
pikaboost 2
To Top