News
பா.ரஞ்சித்தின் செயலுக்கு இந்த படம் பாடம் புகட்டும்!.. கனல் கண்ணனின் சர்ச்சை பேச்சு!..
Pa ranjith: தமிழில் பழைய சினிமா காலங்களில் இருந்து சாதிகள் தொடர்பான திரைப்படங்கள் என்பது வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இடைநிலை சாதிகளை பெருமைப்படுத்தி பேசும் வகையிலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் என்று கூறலாம்.
சூரியவம்சம், சின்ன கவுண்டர், தேவர் மகன், நாட்டாமை, எஜமான் மாதிரி இன்னும் எத்தனையோ திரைப்படங்களில் இடைநிலை சாதிகளை பெருமைப்படுத்தி காட்டியிருப்பதை பார்க்கலாம். அதிகபட்சம் நிறைய திரைப்படங்களில் நடிகர் விஜயகுமார் அப்படியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் அதனை மாற்றியமைத்து இடைநிலை சாதிகளுக்கு எதிரான திரைப்படங்களை எடுப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்திருக்கிறது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படியான ஒரு நபராக பிரபல ஃபைட் மாஸ்டர் கனல் கண்ணன் இருக்கிறார்.
கனல் கண்ணனின் சர்ச்சை பேச்சு:
காடுவெட்டி என்கிற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த கனல் கண்ணன் பேசியிருந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. காடுவெட்டி என்கிற இந்த திரைப்படத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் சாதி ரீதியான திரைப்படமாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார் கனல் கண்ணன். இது குறித்து அவர் பேசும் பொழுது ராமர் கோவில் திறந்த அன்று மாலை அனைத்து இந்துக்கள் வீட்டிலும் விளக்கு ஏற்றி வைக்க சொன்னார் மோடி.

ஆனால் அப்படி விளக்கு ஏற்றியவர்களை தீவிரவாதிகள் போல காட்டுகின்றனர் சினிமாவில் இருக்கும் ஒரு கும்பல். ராமரின் நிறமான நீல நிறத்தை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு வைத்துக் கொண்டு செய்வதெல்லாம் அதற்கு எதிரான விஷயங்களாகவே இருக்கிறது.
எனவே இந்த நபர்களுக்கு எல்லாம் எதிரான திரைப்படமாக காடுவெட்டி திரைப்படம் இருக்கும் என்று நேரடியாக கூறியிருக்கிறார் கனல் கண்ணன் நீலம் நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குனர் பா ரஞ்சித் என்பது அனைவருமே அறிந்த விஷயம். இந்த நிலையில் கனல் கண்ணனின் இந்த பேச்சு சர்ச்சையாகி வருகிறது.
