News
தமிழ் திரைப்பட இயக்குனர் டி.பி கஜேந்திரன் காலமானார்!
தமிழ் சினிமாவில் பல காலங்களாக இயக்குனராக இருந்து வந்தவர் டிபி கஜேந்திரன். இதுவரைக்கும் 15க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார். 100க்கும் அதிகமான படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

1988 இல் எங்க ஊரு காவல்காரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு இவர் அறிமுகமானார். அதன் பிறகு பாசமுள்ள பாண்டியரே, மிடில் க்ளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்சமயம் 72 வயது ஆன நிலையில் கடந்த நில தினங்களாக உடல் நல குறைப்பாட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
