Tamil Cinema News
பெண்களிடம் வீக்கான கணவர்.. டைவர்ஸ் முடிவெடுத்த மனைவி.. இயக்குனர் செய்த காரியம்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த வருடம் விவாகரத்துக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லா காலங்களிலும் பேசப்படும் விஷயமாக இப்பொழுது இந்த விவாகரத்து மாறி இருக்கிறது.
சமீபத்தில் பிரபல இயக்குனரும் அவருடைய திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதற்கு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. இந்தியாவில் மிக பிரபலமான இந்த இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் செய்த வேலைகள்தான் இதற்கு காரணமாக இருக்கிறது. சில வருடங்கள் அந்த பெரிய இயக்குனரிடம் பணியாற்றி விட்டு இவர் தனது முதல் திரைப்படத்தை இயக்கினார்.
அந்த படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் படம் கொஞ்சமாக பேசப்பட்டது. பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த ஒரு நடிகரை வைத்து இரண்டாவது படத்தை இயக்கினார். அந்த படமும் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.
மனைவி எடுத்த முடிவு:
ஆனால் அந்த படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது இந்த இயக்குனரை பொறுத்தவரை எவ்வளவு வளர்ந்து வந்தாரோ அதே அளவிற்கு இவரை பற்றிய சர்ச்சைகளும் அதிகமாக வளர்ந்து வந்தது.
ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். அதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும் இப்பொழுது வரை அந்த படம் வெளியாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஒரு நடிகைக்கு இவர் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நடிகையை தொடர்ந்து தனியாக ரூமுக்கு வரும்படி அழைத்ததாகவும் நடிகை ஒப்புக் கொள்ளாத காரணத்தினால் அந்த நடிகையை படப்பிடிப்பில் திட்டுவது போன்ற விஷயங்களையும் இவர் செய்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இதற்கு முன்பு இயக்கிய படங்களிலும் நிறைய நடிகைகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரிந்த காரணத்தினால் தான் இப்பொழுது விவாகரத்துக்கு அவர் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.