Tamil Cinema News
ஷங்கர் மகளா இது.. மாடர்ன் லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்.. நேசிப்பாயா ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?
சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவராக அதிதி ஷங்கர் இருந்து வருகிறார். விருமன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அதிதி ஷங்கர்.
அதற்கு பிறகு அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அதற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் அதிதி ஷங்கர்.
அதிதி ஷங்கர் இதுவரை நடித்த திரைப்படங்களில் அவரது நடிப்பை பெரிதாக கூறும் வகையில் எந்த ஒரு படமும் அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்துள்ள நேசிப்பாயா திரைப்படம் வரவேற்பை பெற துவங்கியுள்ளது.
நேசிப்பாயா திரைப்படம் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கிறார்.
மேலும் இதில் படம் முழுக்க இவருக்கு காட்சிகள் இருக்கின்றன. மேலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அதிதி ஷங்கர். எனவே இந்த திரைப்படம் அவருக்கு வரவேற்பை ஏற்படுத்திம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
