Connect with us

எல்லார் வாழ்க்கையிலும் நடந்த சம்பவம்தான்!.. பார்க்கிங் பட விமர்சனம்!..

parking

Movie Reviews

எல்லார் வாழ்க்கையிலும் நடந்த சம்பவம்தான்!.. பார்க்கிங் பட விமர்சனம்!..

Social Media Bar

Tamil movie parking Review : இன்று வெளியான திரைப்படங்களில் மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பை பெற்றா திரைப்படமாக பார்க்கிங் திரைப்படம் இருக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் என்கிற இயக்குனர் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஹரிஸ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைப்படி இரண்டு வீடுகளை கொண்ட ஒரு குடியிருப்பு இருக்கிறது. அதில் கீழ்த்தளத்தில் நேர்மையான அரசு அதிகாரியான எம்.எஸ் பாஸ்கர் பல வருடங்களாக குடியிருக்கிறார். இந்த நிலையில் மேல் தளத்திற்கு புதிதாக ஹரிஸ் கல்யாண் அவருடைய கர்ப்பிணி மனைவியுடன் குடி வருகிறார்.

ஆரம்பத்தில் இருவருமே பைக் வண்டியைதான் வைத்துள்ளனர். ஆனால் பிரசவ காலத்தில் இருக்கும் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தனது பைக்கை விற்றுவிட்டு ஒரு காரை வாங்குகிறார் ஹரிஸ் கல்யாண். அந்த குடியிருப்பில் ஒரே ஒரு கார் பார்க்கிங்தான் இருக்கிறது.

அந்த கார் பார்க்கிங்கில் ஹரிஸ் கல்யாண் தனது காரை நிறுத்துவதால் எம்.எஸ் பாஸ்கருக்கு தனது பைக்கை நிறுத்துவது சிரமமாகிறது. இந்த நிலையில் ஒரு நாள் தனது பைக்கை தெரியாமல் அந்த காரில் உரசி விடுகிறார் எம்.எஸ் பாஸ்கர்.

இதனால் இருவருக்குமிடையே துவங்கும் சண்டை விஸ்வரூபம் எடுக்கிறது. அதன் முடிவு என்னவாக இருக்கிறது என்பதே கதை. ஊர் உலகம் முழுக்க பலரும் கதையை தேடும்போது வீட்டின் வாசலிலேயே கதையை தேடியுள்ளார் படத்தின் இயக்குனர்.

பலரது வீட்டிலும் சென்னையில் அன்றாடம் இந்த பார்க்கிங் பிரச்சனை இருக்கும். அதை ஒரு இரண்டு மணி நேர சுவாரஸ்ய கதையாக்கியதன் மூலம் முதல் காட்சியிலேயே வரவேற்பை பெற்றுள்ளார் இயக்குனர். வழக்கமான படங்களில் இருக்கும் தேவையில்லாத பாடல்களோ பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகளோ இல்லாமல், நிஜ வாழ்வின் பார்வையில் இருந்தே படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.

இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்த படங்களில் கண்டிப்பாக பார்க்கிங் படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top