Movie Reviews
ரன் பேபி ரன் எப்படி இருக்கு? – சுருக்கமான பட விமர்சனம்
இன்று பிப்ரவரி 3 ஆம் தேதி பல படங்கள் திரையில் வெளியாகியுள்ளன. அதில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படமும் ஒன்றாகும். பொதுவாக குடும்ப படம், காமெடி படம் என நடிக்கும் ஆர்.ஜே பாலாஜி சிறிது வித்தியாசமாக முயற்சித்து முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் கான்செப்ட்டில் நடித்துள்ள திரைப்படம் ரன் பேபி ரன்.

இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி வங்கியில் வேலை பார்க்கும் ஒரு ஊழியராக ஆர்.ஜே பாலாஜி இருக்கிறார். அவருக்கு திருமண நிச்சயம் ஆகிறது. திருமண பெண்ணிற்கு நகை வாங்கி கொண்டு தனது காரில் ஏறும்போது ஒரு விஷயத்தை அவர் பார்க்கிறார்.
அவரது காரில் ஒரு பெண் மறைந்திருக்கிறார். என்ன இது மர்மமாக ஒரு பெண் மறைந்திருக்கிறாரே என திகைப்பாக ஆர்.ஜே பாலாஜி பார்ப்பதில் துவங்கி படத்தின் இறுதி வரை த்ரில்லராகவே படம் செல்கிறது. அந்த பெண் யார்? அவரால் ஆர்.ஜே பாலாஜிக்கு என்னவெல்லாம் நிகழ போகிறது? அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்க போகிறார் என்பதே கதை.
படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இரவிலேயே நடந்தாலும் ஒளிப்பதிவு விஷயத்தில் எந்த ஒரு பிசிறும் இல்லாம் நன்றாக செய்துவிட்டனர். அதே போல த்ரில்லர் படத்தில் மிக சீரியஸான ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதையும் சிறப்பாக நடித்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
மொத்தத்தில் இதுவரை ஆர்.ஜே பாலாஜியின் படத்தை பார்த்தவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
