Special Articles
தமிழில் ஹாலிவுட்டிற்கு இணையாக வெளிவந்த டெரரிஸ்ட் படங்கள்!..
நம் அனைவருக்கும் ஹாலிவுட் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரும் போது அதை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக இருப்பார்கள். காரணம் என்னவென்றால் ஹாலிவுட் படத்தில் பல பிரமாண்ட காட்சிகளும், மனித சக்தியால் முடியாத பல விஷயங்களையும் படத்தின் மூலம் தத்ரூபமாக காட்டியிருப்பார்கள். அந்த வகையில் ஹாலிவுட்டில் நிறைய படங்களை நாம் பார்த்து ரசித்திருப்போம். ஒரு சில ஹாலிவுட் நடிகர்களும் ஃபேவரிட் நடிகர்களாக இருப்பார்கள்.
ஹாலிவுட் போன்று பல படங்களையும் கோலிவுட் சினிமாவில் கொடுக்க வேண்டும் என இயக்குனர்களும் நினைப்பதுண்டு. அந்த வகையில் ஹாலிவுட் அளவிற்கு தமிழில் வந்த படங்களின் பட்டியலை காண்போம்.
விஸ்வரூபம் (2013)
கமல் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கமல் எழுதி, இயக்கி மற்றும் நடித்திருந்தார். இந்த படத்தில் கமல் விஸ்வநாத் என்ற விஸாம் அஹமத் கஷ்மீரி என்ற பெயரில் தமிழ் பேசும் தாய்க்கும் முஸ்லிம் தந்தைக்கும் பிறக்கிறார்.
மேலும் இவர் இந்தியாவின் “ரா” அமைப்பைச் சேர்ந்த உளவாளியாகவும் இருக்கிறார். விஸ்வநாத் என்ற அடையாளத்தில் கதக் நடன ஆசிரியராக அங்கு செயல்படுகிறார். மேலும் தீவிரவாதியின் தலைமையில் நியூயார்க் நகரத்தில் நடக்கவிருக்கும் பயங்கரவாதத்தை விஸாம் தன் குழு உடன் இணைந்து எவ்வாறு வெற்றிகரமாக முடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
பேராண்மை (2009)
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பேராண்மை. இந்தப் படத்தின் கதைச்சுருக்கம் என்னவென்றால் இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவ தயாராக இருக்கிறது. ஆனால் இதை சீர்குலைக்க அந்நிய சக்திகள் ஒரு காட்டிற்குள் வருகின்றன. அதை ஜெயம் ரவியும், அவரின் மாணவிகள் 5பேரும் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பது தான் கதை. இந்த படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.
குருதிப்புனல் (1995)
இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த அட்டகாசமான திரைப்படம் ஆகும். ஆஸ்காருக்காக இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படத்தில் கமலும் அர்ஜுனும் ஆதிநாராயணன் மற்றும் அப்பாஸ் என்ற இரு நேர்மையான புலனாய்வுத்துறை அதிகாரிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் பத்ரி என்பவரின் தலைமையில் இயங்கும் ஒரு பயங்கரவாத குழுவை அழிப்பதற்காக ஒரு ஆபரேஷன் திட்டத்தை ரகசியமாக ஆரம்பிக்கிறார்கள். மேலும் பயங்கரவாத குழுவிற்குள் ஊடுருவி உளவு பார்ப்பதற்காக இரு காவல் அதிகாரிகளை இவர்கள் அனுப்புகிறார்கள்.
இந்த செய்தி பயங்கரவாத குழுவிற்கு சென்று விடுகிறது. இதற்கு காரணம் காவல்துறையில் இருக்கும் ஒரு கருப்பு ஆடு தான் காரணம் தெரிய வர ஆனால் அது யார் என்று தெரியாமல் ஆதி புலம்புகிறார். இந்நிலையில் காவல் அதிகாரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடக்கும் இந்த போரில் ஜெயிச்சது யார் மற்றும் பயங்கரவாதிகள் உருவாவதற்கான காரணம் என்ன காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் உருவாவதற்கான காரணம் என்ன என்பதை மிக அழகாக கூறியிருப்பார்கள்.
உன்னை போல் ஒருவன் (2009)
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உன்னை போல் ஒருவன். இந்த படத்தில் மோகன்லால் காவல்துறை ஆணையராக நடித்திருக்கிறார். சென்னை காவல்துறை ஆணையர் மோகன்லாலுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார். அவர்தான் படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன். போன் செய்யும் அந்த நபர் சென்னையில் 5 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறுகிறான். மேலும் அவர் நான்கு தீவிரவாதிகளின் பெயரை குறிப்பிட்டு விடுவிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் குண்டுகள் வெடிக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் நான்கு தீவிரவாதிகளும், காவல்துறை அதிகாரிகளான அந்த நான்கு பேரையும் விமான நிலையத்தில் விடுவிக்கின்றனர். மேலும் அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும் கதையின் முடிவாக விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது.
துப்பாக்கி (2012)
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இந்த திரைப்படத்தில் ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தில் விஜய் ராணுவத்தில் வேலை செய்யும் நபராக நடித்திருக்கிறார். விடுமுறைக்கு தன் வீட்டிற்கு வரும் ஜெகதீஷ் அப்போது ஒரு வெடிகுண்டு சம்பவம் ஒன்று நிகழ்கிறது அந்த வெடிகுண்டு வைத்தவன் விஜயிடம் சிக்கிக்கொள்கிறான். மேலும் அவனிடமிருந்து பல திட்டங்களை பற்றி தெரிந்து கொள்கிறான்.
மேலும் அந்தத் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் வேலை பார்க்கும் சக இராணுவ வீரர்களின் துணையை விஜய் நாடுகிறார். இறுதியாக அந்த கூட்டத்தின் தலைவனை விஜய் சந்திப்பது இந்த படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.
பயணம் (2011)
இந்த படம் நாகார்ஜுனா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படம் இந்திய விமானம் கடத்தப்பட்ட உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் நடுவானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விமானம் பழுதடைந்ததால் திருப்பதி விமான நிலையத்தில் தரை இறக்கப்படுகிறது.
மேலும் தீவிரவாதிகளால் விமானம் சிறைபிடிக்கப்பட்டள்ளது என்ற செய்தி அனைவருக்கும் தெரிய வர தீவிரவாதிகளிடமிருந்து எவ்வாறு பயணிகளை பத்திரமாக காப்பாற்ற தேசிய பாதுகாப்பு படை வீரர் நாகார்ஜுனா ஒரு திட்டம் வகுக்கிறார். பயணிகளின் பலரின் உதவியால் தீவிரவாதிகளை கொன்று எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பது படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்