Wednesday, December 17, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
tamil cinema

பா ரஞ்சித், மாரி செல்வராஜ்க்கு முன்பே சமூகநீதி பேசிய தமிழ் திரைப்படங்கள்..!

by Raj
August 29, 2024
in Special Articles, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அந்த வகையில் பேட்டி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட ஜெயம் ரவி தான் நடித்த கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதி பிறந்தநாள் பற்றி கூறியிருக்கும் ஒரு தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் ரவி முதன் முதலில் தன்னுடைய சகோதரனின் இயக்கத்திலும் தந்தையின் தயாரிப்பிலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரவி என்னும் தன் பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்னும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இவருக்கு மற்றும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு தாஸ் மழை இதயத் திருடன் சம்திங் சம்திங் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது. பிறகு தீபாவளியை சந்தோஷப்பிரமணியம் பேராண்மை தில்லாலங்கடி எங்கேயும் காதல் நிமிர்ந்து நில் தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் கோமாளி என்ற திரைப்படத்தில் நடித்தார் இதைப்பற்றி அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

பிரதீப் ரங்க நாதனை பற்றி ஜெயம் ரவி கூறியது

பிரதீப் ரங்கநாதன் அறிமுக இயக்குனராக ஜெயம் ரவி காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்க நாதனை பற்றி கூறும் போது அவர் கோமாளி படத்தின் கதையை கூறும் போது எனக்கு விருப்பமில்லை. இந்த படம் எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்று எனக்கு சந்தேகமாக இருந்தது அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்நிலையில் பிரதி பிறந்தநாள் என்னிடம் உங்களுக்கு இந்த படத்தில் பிடித்த சீக்வன்ஸ் ஒன்றை கூறுங்கள் நான் சென்று அந்த சீக்குவன்சி உங்களுக்கு எடுத்து காமிக்கிறேன் எனக் கூறினார். நானும் அந்த படத்தில் வரும் ஒரு சீக்குவன்ஸ் ஒன்றை கூறினேன் அது தன்னுடைய முன்னாள் காதலியை தன் நண்பனை கூட்டிக்கொண்டு பார்ப்பதற்காக செல்லுவார். அந்தப் பெண்ணிற்கு முன்னதாகவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தையும் இருக்கும். அப்போது அந்தப் பெண்ணை பார்க்கும்போது பயத்தில் அவனுக்கு வியர்க்கும் இது நகைச்சுவையான காட்சி என்றாலும் அதிலும் ஒரு உண்மை தன்மை இருக்கும் இதை எப்படி பிரதிபரங்கநாதன் பண்ணுவார் என நான் அவரிடம் இந்த சீக்குவின்ஸி கூறினேன்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக கருதப்படும் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் சமூக நீதி கருத்துக்கள் குறித்த பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், அவர்களின் கருத்தும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

நான் இந்த பதிவில் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்குனர்களுக்கு முன்பாகவே தமிழில் சமூக நீதி பற்றி பேசிய திரைப்படங்களைப் பற்றி காணலாம்.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் 1992

onna irukka kathukkanum

இந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது சிவக்குமார், ஜீவா, கவுண்டமணி, செந்தில், மனோரமா, கோவை சரளா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை பண்ணையார் ஆடு மாடுகள் ஒன்று நடத்துகிறார். கல்வி அறிவு இல்லாத அந்த மக்கள் அடிமைத்தனத்திலேயே வாழ்கிறார்கள். அந்த ஊருக்கு புதிதாக பள்ளிக்கூடத்திற்கு வரும் வாத்தியார் மக்களின் குழந்தைகளுக்கு கல்விக்காக உதவுகிறார்.

மேலும் அவர்களது அறியாமையால் அந்த ஊர் பண்ணைக்காரர் அவர்களை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும் உணர்த்துகிறார். தன்னிலை உணரும் அம்மக்கள் என்ன ஆனார்கள் அந்தப் பண்ணையார் இறுதியில் என்ன ஆனார் என்றும் ஜாதியை கொடுமைகளை காட்டும் சமூக திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கும்.

அலை ஓசை 1985

Vijayakanth

விஜயகாந்த், நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் சிறுமுகை ரவி இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. இளையராஜா இந்த இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். இந்த படத்தின் கதாநாயகன் முத்து தனது கிராம மக்களின் நலனுக்காக போராடுபவனாகவும், அந்த கிராமத்தில் வாழும் வடிவு என்ற பெண் மீது காதல் கொள்கிறாள்.

மேலும் அவளை திருமணம் செய்ய வில்லத்தனமான மாமா முத்துவை தடுப்பதற்காக பல தடைகளை ஏற்படுத்துகிறார். இறுதியில் அந்த கிராம மக்களை படித்த முத்து எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்கிறான். வடிவைத் திருமணம் செய்து கொள்கிறானா என்பது தான் படத்தின் கதை. இந்த படம் கீழ்வெண்மணி என்னும் கிராமத்தின் பிரச்சனையை அடிப்படையாக க் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இரணியன் 1999

raniyan

இந்த திரைப்படத்தில் முரளி மற்றும் மீனா ஆகியோர் நடிக்க, ரகுவரன் ரஞ்சித் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் முரளி இரணியனாக நடிக்க அவரது மாமன் மகளாக மீனா நடிக்கிறாய். சிறையிலிருந்து கிராமத்திற்கு வரும் இராணியன் நிலப்பிரபுத்துவ கொடுமைகளை எவ்வாறு அழிக்கிறான் மற்றும் தன் மாமன் மகளை எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறான் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நிலப்பிரபுத்துவ குடும்பம், காலில் செருப்பு அணிகின்ற கூலி விவசாயிகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடும் போராட்டத்தில் இரணியன் சக நண்பர்களை இழக்கிறான். மீண்டும் பட்டினிக்கும் சாவுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகும் கூலி தொழிலாளர்கள் இரணியனின் போராட்ட உத்வேகத்தில் இருந்து விலகுகிறார்கள். இந்நிலையில் இறுதியாக அந்த கிராம மக்கள் இணியனை புரிந்து கொண்டார்களா? இறுதியில் இரணியனின் இறப்பு எவ்வாறு நடந்தது? நிலப்பிரபுத்துவம் ஒழிந்ததா என்பதை காட்டும் படமாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் வாட்டாக்குடி இரணியனின் கதையை அடிப்படையாக க் கொண்டு வெளிவந்த திரைப்படமாகும்.

வேதம் புதிது 1987

vedham puthu

பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் அமலா நடித்திருப்பார்கள். ஊர் பெரியவராக சத்யராஜ் நடிக்க அந்த கிராமத்தில் ஜாதி பார்க்காமல் அனைவரிடமும் சமமாக பழகுவதாக பாலு தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாத்திகம் பேசும் அவரின் சொல்லுக்கு ஊர் மக்கள் கட்டுப்படுவார்கள். எந்த ஒரு பஞ்சாயத்து ஆக இருந்தாலும் இவரின் சொல்லுக்கு மறுத்து யாரும் பேச மாட்டார்கள்.

சத்யராஜனின் மகன் ராஜா வெளியூரிலிருந்து படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு வருகிறார். கிராமத்தில் பிராமண சமூகத்தை சேர்ந்த காதலியான அமலாவை சந்திக்கிறான். இருவரும் காதலிக்க ராஜாவும் அமலாவின் தந்தையும் ஒரு விபத்தில் இறந்து போய் விடுகிறார்கள்.

மேலும் அமலாவும் இறந்து விட்டதாக அந்த ஊர் மக்கள் நினைத்த வேளையில், யாரும் இல்லாத அனாதையாக அமலாவின் தம்பி நிற்கிறான். பிராமண சமூகத்தினர் அவனை வளர்க்க விரும்பாத நிலையில் பாலு தேவர் அவனை தத்தெடுத்து தன் சொந்தன் மகன் போல் வளர்க்கிறான்.

பிராமண சமூகத்தினர் தங்களை விட கீழ் சமூகத்தில் பிராமண பையன் ஒருவன் சாப்பிடுவது எண்ணி கோபம் அடைகிறார்கள். இந்நிலையில் இறந்ததாக நினைத்த அமலா ஊருக்குள் திரும்பி வருகிறார். அவரை வெளியேற்றும் படியாக பிராமண சமுதாயத்தினர் கூற சத்யராஜ் அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். பிறகு என்ன நடந்தது என்பது படத்தின் கதையாக உள்ளது.

பராசக்தி 1952

sivaji parasakthi

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். தாயை இழந்த கல்யாணி தன் அப்பாவுடன் மதுரையில் வசித்து வருகிறாள். கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். குணசேகரன், சந்திரசேகரன், ஞானசேகரன் என்ற மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். இதில் குணசேகரனாக சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். இவர்கள் மூவரும் மியான்மரில் வணிகம் செய்து வருகிறார்கள்.

1940 இல் உலகப் போர் நடக்கிறது. இந்நிலையில் தங்கை கல்யாணிக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. மூவரும் மதுரைக்கு வர நினைக்கும் வேளையில் கடைசி அண்ணன் குணசேகரனுக்கு மட்டும் கப்பலில் பயண சீட்டு கிடைக்கிறது.

பரிசு பொருட்களுடன் மதராசபட்டினம் வருகிறான் குணசேகரன். ஆனால் அங்கு ஒரு பெண்ணால் இவர் ஏமாந்து போக, மதுரைக்கு செல்ல வழி இல்லாமல் பசியினால் சமூக அவலங்களை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கல்யாணம் நடந்து மகிழ்ச்சியாய் வாழும் கல்யாணிக்கு குழந்தை பிறக்கிறது. ஒரு விபத்தில் கணவனும், கல்யாணியின் தந்தையும் இறந்து போக கைம்பெண்கள் சந்திக்கும் துயரங்களை கல்யாணி என்னும் கதாபாத்திரம் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதையும் அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும் இந்த படம் விளக்குகிறது.

அரவிந்தன் 1997

sarathkumar

1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அரவிந்தன் இந்த கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க போலீஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அவரது நண்பர் தமிழ்வண்ணன் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டதும் அரவிந்தன் காவல்துறை மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட தொடங்குகிறான். இதற்காக மக்களின் ஆதரவையும் பெறுகிறான். அரசியல்வாதிகளுக்காக அரவிந்தனை காவல்துறை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் அரவிந்தன் காயத்ரி என்னும் ஒருவர் வீட்டில் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அப்போது மேலாளர் தொழிலாளர்களுக்கு நியாயமான விலை கொடுக்கவில்லை என்பதற்காக மேலாளரை மிகவும் மோசமாக அரவிந்தன் அடிக்கிறான். இதனால் நக்சலைட் என அடையாளம் காட்டப்பட்ட அரவிந்தன் இறுதியாக நீதிமன்றத்தில் சரணடைகிறான். சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்தன் சிறையில் இருந்தவாறு ஊழலுக்கு எதிரான பல கட்டுரைகளை எழுதுகிறார். இதனால் அரவிந்தன் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மக்கள் பலரும் ஆதரவு தருகிறார்கள்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல்வாதிகள் அரவிந்தனை கொலை செய்ய திட்டமிட்டு இறுதியில் அவர் சுட்டுக் கொல்லகிறார்கள். இந்த படம் கீழ்வெண்மணி பிரச்சினை அடிப்படையாக கொண்ட படமாகும்.

Tags: Actor muralisarthkumarsathyarajvijayakanthதமிழ் சினிமா
Previous Post

காதல் ஆசையில் செத்து போன சிறுவனின்  பிரேத ஆத்மா.. முஞ்சியா பேய் படம் எப்படி இருக்கு!..

Next Post

நீங்க பெரிய ஒழுங்கா.. பாலியல் விஷயத்தில் விஷாலுக்கு விழுந்த அடி.. கேள்வி கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

என்னை ரஞ்சித்தோட சேர்த்து பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய மாரி செல்வராஜ்.!

October 31, 2025

லோகேஷ் பண்ணுன அந்த விஷயம் ரஜினிகிட்ட வாய்ப்பை இழக்க காரணம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்.!

October 31, 2025
Next Post
vishal lakshmi ramakrishnan

நீங்க பெரிய ஒழுங்கா.. பாலியல் விஷயத்தில் விஷாலுக்கு விழுந்த அடி.. கேள்வி கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved