நம்ம அனிரூத்தா இது! அடையாளமே தெரியல! – சின்ன வயசு அனிரூத்தை பார்த்துள்ளீர்களா!

தற்சமயம் தமிழ் இசையமைப்பாளர்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அனிரூத். அவருக்கு இருக்கும் ரசிக பட்டாளத்திற்கு இப்போது ஹீரோவாக படம் நடித்தால் கூட அவரது திரைப்படம் ஹிட் அடிக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ரசிக பட்டாளத்தை கொண்டுள்ளார் அனிரூத்.

Social Media Bar

இதுவரை 60 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிரூத் 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக 3 திரைப்படம் மூலமாக அறிமுகமானார். 3 திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்தன. அதையடுத்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் அனிரூத்.

எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே எல்லாமே ஹிட் அடித்தன. இறுதியாக விக்ரம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதுவும் நல்ல ஹிட் கொடுத்தது. தற்சமயம் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இவை இல்லாமல் அடுத்து இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கும் தலைவர் 170 திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். அனிரூத் தனது சிறு வயது முதலே இசையமைப்பதில் ஆர்வம் காட்டி வந்தவர். அவருடைய சிறு வயது புகைப்படங்களை பார்க்கும்போது இந்த விஷயம் தெரிகிறது.