News
வாரிசு, துணிவு ஸ்பெஷல் காட்சிகள் ரத்து ! – கவலையில் ரசிகர்கள்!
நாளை தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கும் இரண்டு முக்கியமான திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு. டிக்கெட் ஓப்பன் ஆன சிறிது நேரங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டன.

பல திரையரங்குகளில் 17 ஆம் தேதி வரை அனைத்து காட்சிகளும் புக்கிங் ஆகியுள்ளன. இந்த நிலையில் முதல் நாள் மட்டும் துணிவு படத்தை இரவு ஒரு மணி காட்சியில் ஒளிப்பரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது இல்லாமல் காலை 8 மணிக்கு இரண்டு படங்களையுமே போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்சமயம் அதிர்ச்சியான சில தகவல்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
அதன்படி ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களுக்கும் அதிகாலை காட்சிகளை ரத்து செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
- மேலும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்களும் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.
- பெரிய கட் அவுட்களை வைத்து பால் ஊற்றி பூஜை செய்தல் போன்ற நிகழ்வுகளைச் செய்ய கூடாது.
- நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக டிக்கெட் தொகை வசூலிக்க கூடாது. அப்படி கூடுதல் விலைக்கு விற்றால் அந்த திரையரங்கின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
ஏற்கனவே படங்களுக்கு புக்கிங் செய்த ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியில் உள்ளனர்.
