News
மீனா மேல ஆசை… 10 லட்சம் செலவு பண்ணி கூப்பிட்டுருக்காங்க.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!
Meena: சினிமா என்றாலே சர்ச்சைகளும், வதந்திகளும் எப்பொழுதும் உலாவிக்கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் படத்தில் நடிக்கும் சக நடிகர், நடிகைகளையும், இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் சேர்த்து வைத்து வதந்திகள் வருவது வழக்கமான ஒன்றுதான்.
மேலும் ஒரு சில நடிகர் நடிகைகள் தனிப்பட்ட முறையில் யாருடன் டேட்டிங் செய்தாலோ அதைப்பற்றிய தகவல் கிடைத்தால் அது இணைத்தளத்தில் பரவி வைரலாகும்.
இந்நிலையில் சமீப காலங்களாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகை தான் மீனா. தற்பொழுது அவரைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்திருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நடிகர் மீனா குறித்த சர்ச்சை
கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் பிரபல அரசியல்வாதியான எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழா நிகழச்சி நடைபெற்றது. இதில் பல அரசியல் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நடிகை மீனா மற்றும் கலா இருவரும் பங்கேற்றார்கள்.
அரசியலில் இருக்கும் குஷ்பூ பங்கேற்காத நிலையில் எந்த ஒரு அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத மீனா அதில் கலந்திருந்தது பெரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.

ஆனால் அப்பொழுதெல்லாம் பேசாமல் கடந்த சில தினங்களாக அவரைப் பற்றியும் அரசியல்வாதி எல். முருகனைப் பற்றியும் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற வதந்திகளுக்கு மீனா முன்னதாகவே பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் முட்டாள்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது என பதிவிட்டிருந்தார்.
ஆனால் அவர் ஏன் கலந்து கொண்டார் என்ற கேள்வி மட்டும் தற்பொழுது அனைவரின் மத்தியிலும் எழுந்து வருவதாக பலரும் பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வந்தார்கள்.
தமிழா தமிழா பாண்டியன் கருத்து
தற்பொழுது மீனா-வை பற்றிய வதந்திக்கு கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன், ஒரு நடிகை ஒரு விழாவில் கலந்து கொள்கிறார் என்றால் நிச்சயம் பணம் வாங்காமல் கலந்து கொள்ள மாட்டார். எனவே மீனா இதில் கலந்து கொள்வதற்கு ரூ.10 லட்சம் பணம் வாங்கி இருக்கலாம். மீனா ஏன் கலந்து கொண்டார் என கேட்டால் ஒருவேளை மீனாவின் ரசிகராக எல்.முருகனின் மனைவிக்கு பிடித்திருக்கலாம் அல்லது எல். முருகனுக்கு பிடித்திருக்கலாம். எனவே சினிமா பிரபலமாக அவர் பணம் வாங்கிக்கொண்டு அந்நிகழ்ச்சியில் கலந்து இருக்கலாம் என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் எல். முருகனுக்கு வேண்டாதவர்கள் யாரேனும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சையை கிளப்பி இருப்பார்கள் என தமிழா தமிழா பாண்டியன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
