மருத்துவ உதவி கேட்ட ரசிகர்! – ஓடி சென்று உதவி செய்த அல்லு அர்ஜூன்!

தமிழ் திரையுலகில் விஜய் அஜித் போல தெலுங்கு திரை உலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவர் நடித்து தமிழ் டப்பிங்கில் வெளிவந்த திரைப்படங்களே தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Social Media Bar

அல வைகுந்தபுரம், டி.ஜே போன்ற திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவை. போன வருடம் தெலுங்கில் வெளியாகி தெலுங்கு சினிமாவில் பெரும் பெயர் வாங்கிய திரைப்படம் புஷ்பா. கே.ஜி.எஃப் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் திரைப்படம்.

கே.ஜி.எக் போல கோர்ட் போட்ட ஹீரோவாக இல்லாமல் மிகவும் லோக்கலான ஹீரோவாக புஷ்பா அறிமுகமானதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்சமயம் அதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் அல்லு அர்ஜூன். இவர் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அப்போது அதில் கமெண்டில் ரசிகர் ஒருவர் தனக்கு பண உதவி தேவை என எழுதியிருந்தார். தனது தந்தைக்கு நுரையீரல் தொடர்பான நோய் ஒன்று இருப்பதாகவும், அதை சரி செய்ய 2 லட்ச ரூபாய் தேவை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விஷயத்தை உறுதி செய்த அல்லு அர்ஜூன் உடனே தனது ரசிகர் மன்றம் மூலம் அந்த நபரை தொடர்பு கொண்டு அவருக்கு பண உதவி செய்துள்ளார். அவரது ரசிகர் மன்றம் அந்த செய்தியை இணையத்தில் பகிர்ந்துள்ளது. தற்சமயம் அனைவரும் இதனால் அல்லு அர்ஜூனை பாராட்டி வருகின்றனர்.