அந்த காலத்தில் எல்லாம் வில்லன் நடிகர்கள் மேல் மக்கள் தொடர்ந்து வெறுப்புகளை காட்டி வருவது நடந்து வந்தது. எம்.ஜி.ஆர் மாதிரியான நடிகர்கள் படங்களில் வில்லன் நடிகராக நடிக்கும் நடிகர்களை மக்கள் அப்பொழுது வெறுத்து வந்தனர்.
நடிகர் நம்பியார் கூட கிராமங்களுக்கு படபிடிப்புகளுக்கு செல்லும்போது அவரை பார்த்து மக்கள் பயப்படுவார்கள் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த அளவிற்கு சினிமாவை உண்மை என்று நம்பி வந்தனர் மக்கள்.
வில்லன் நடிகருக்கு விழுந்த அடி:
ஆனால் இப்பொழுதும் கூட மக்கள் இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சமீபத்தில் லவ் ரெட்டி என்கிற ஒரு தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் காதல் கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் ஆகும்.
இதில் வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு தெலுங்கு நடிகர் நடித்திருந்தார். மோசமான வில்லன் கதாபாத்திரமான அவர் கடைசியில் இந்த காதலர்களை சேரவிடாமல் முடிவது போல கதை அமைப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் பட புரமோஷன் திரையரங்கிற்கு வந்துள்ளது.
அங்கே படம் பார்த்த ஒரு பெண்மணி இந்த நபரின் மீது கோபம் கொண்டு வில்லன் நடிகரை திரையரங்கிலேயே அடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த விஷயம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இது குறித்து ரசிகர்கள் பேசும் பொழுது படத்தின் ப்ரோமோஷனுக்காக வேண்டும் என்றே இவர்கள் இதை செய்திருக்கின்றனர்.
யாராவது படத்தை பார்த்துவிட்டு அது உண்மை என்று நம்பி நடிகரை போய் அடிப்பார்களா என்று கேட்டு வருகின்றனர்.









