Connect with us

தலைவர் 171 கன்ஃபார்ம் –அடுத்த மாதம் அறிவிப்பு வரும்!

News

தலைவர் 171 கன்ஃபார்ம் –அடுத்த மாதம் அறிவிப்பு வரும்!

Social Media Bar

நடிகர் ரஜினி நடித்து தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கான படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் லால் சலாம்.

லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிக்கு அதிக காட்சிகள் கிடையாது என கூறப்படுகிறது. எனவே அந்த படத்தின் படப்பிடிப்புகள் கொஞ்சமாகதான் இருக்கும். எனவே எப்படி இருந்தாலும் இந்த வருடம் முடிவதற்கும் ரஜினியின் அடுத்த படமான 171 துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171 ஐ முதலில் டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்ரவர்த்திதான் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் கதை ரஜினிக்கு திருப்தியாக இல்லாத காரணத்தால் அடுத்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ரஜினி.

ஞானவேலின் ஜெய்பீம் திரைப்படம் இந்தியாவை தாண்டி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இந்த நிலையில் ரஜினியை வைத்து அவர் இயக்கும் படம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கிறது என கூறப்படுகிறது. தற்சமயம் இந்த படத்திற்கான திரைக்கதை வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.

To Top