தளபதி 67 இத்தனை நாளைக்கு ஷூட்டிங்கா? – தளபதியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய லோகேஷ்.!

தற்சமயம் நடிகர் விஜய் நடித்து அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

இந்த படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு நிலவி வருகிறது. வாரிசு படம் முடிந்த பிறகு இந்த படத்திற்கான பட வேலைகள் துவங்கும் என கூறப்படுகிறது. அதிகப்பட்சம் வருகிற ஜனவரியில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக எத்தனை நாட்களில் படத்தை எடுக்கலாம் என்பதை முதலில் தீர்மானிப்பார்கள். அதிகப்பட்சம் 60 முதல் 100 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும். ஆனால் இந்த படத்திற்கு 170 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் லோகேஷ் கனகராஜ். இது கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் எடுப்பதற்கான கால்ஷீட் என கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்தே இதை விட குறைவான நாட்களில் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே 170 நாட்கள் எடுக்கும் அளவிற்கு படத்தில் என்ன கதை உள்ளது என ஆச்சரியத்தில் உள்ளனர் திரைத்துறையினர்

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh