Connect with us

அந்த கிரிக்கெட் படத்தில் விஜய் சேதுபதியை தூக்குனதுக்கு இதுதான் காரணம்!..

Cinema History

அந்த கிரிக்கெட் படத்தில் விஜய் சேதுபதியை தூக்குனதுக்கு இதுதான் காரணம்!..

Social Media Bar

தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு விஜய் சேதுபதி கதை தேர்ந்தெடுப்பதும் முக்கிய காரணமாகும்.

விஜய் சேதுபதி அவருக்கு பிடித்த கதையாக இருந்தால் அதற்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. அப்படியாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு மிகவும் ஆசைப்பட்ட திரைப்படம்தான் 800.

முக்கியமான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டனர். அதில் விஜய் சேதுபதிதான் முத்தையா முரளிதரனாக நடிக்கவிருந்தார். ஆனால் வேறு சூழ்நிலைகள் காரணமாக அவர் படத்தில் நடிக்க முடியவில்லை.

தற்சமயம் மதுர் மிட்டல் என்கிற நடிகர் இந்த படத்தில் நடித்துள்ளார். இதுக்குறித்து முத்தையா முரளிதரன் தனது பேட்டியில் கூறும்போது விஜய் சேதுபதி இளமையான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவரது உடலமைப்பு ஒத்துவரவில்லை. எனவே அவர் படத்தில் நடிக்கவில்லை.

மேலும் மதுர் மிட்டலுக்கு என்னை போலவே ஒரு கை சாய்ந்து உள்ளது. எனவேதான் அவரை அந்த படத்தில் நடிக்க வைத்தனர் என முத்தையா முரளிதரன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

To Top