Tamil Cinema News
படத்தில் பங்கு வேண்டும்.. நயன் தாரா போட்ட கண்டிஷன்.. இரு மடங்கு பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன்.!
தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் திரை கதையில் துவங்கி பல விஷயங்களை வேலை பார்ப்த்தவர் நடிகரும் இயக்குனருமான ஆர.ஜே பாலாஜி
ஆர்.ஜே பாலாஜியின் உழைப்பால் அந்த திரைப்படம் சிறப்பான காமெடி திரைப்படமாக வந்தது. அந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு வைக்கப்பட்டிருந்த காட்சிகளுமே நன்றாக ஒர்க்அவுட் ஆயிருந்தது.
இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து தயாரிக்க இருக்கிறது வேல்ஸ் நிறுவனம். இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார் என்பதாலேயே இப்பொழுது இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏனெனில் சுந்தர் சி மற்றும் நயன்தாரா காம்போவில் ஒரு சாமி படம் என்னும் பொழுது இது மிகப் புதிதாக இருக்கும். சுந்தர்சியம் இதுவரை எந்த சாமி திரைப்படத்தையும் இயக்கியது கிடையாது பேய் படங்களை தான் இயக்கி இருக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு சாதாரணமாகவே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் 55 கோடி பட்ஜெட்டில்தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் சுந்தர்சி வந்த பிறகு படத்தின் பட்ஜெட் அதிகரித்திருக்கிறது. இப்பொழுது இந்த திரைப்படம் 112 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது.
தமிழ் சினிமவில் முதன்முதலாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதைக்கு 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் செலவிடப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. நயன்தாரா இந்த படம் நல்ல வசூலை கொடுக்கும் என்று நம்பி வருவதால் படத்திற்கு 50 சதவீத சம்பளத்தை மட்டுமே வாங்கி இருக்கிறார்.
மீதி 50 சதவீதத்தை படத்தில் வரும் லாபத்தில் இருந்து பங்குகளாக கேட்டிருக்கிறார் நயன்தாரா
